சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

சொர்ணலதாவின் விருது பெற்ற பாடல்கள்.. அதுலயும் இந்தப் பாட்டு வேர்ல்டு ஹிட்

இளையராஜாவின் இசைக்கு குரல் கொடுத்தவர்தான் ஸ்வர்ணலதா. இளையராஜாவின் 300க்கும் மேற் பாடல்களை சொர்ணலதா பாடியுள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மொழிகளில் ஏழு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார் சொர்ணலதா. இவர் அபூர்வமான குரலைக் கொண்டு ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளார். சொர்ணலதா, தன்னுடைய 37 வது வயதில் நுரையீரல் பாதிக்கப்பட்டு மண்ணுலகை விட்டு பிரிந்தார்.

சின்னத்தம்பி: பிரபு, குஷ்பு, கவுண்டமணி என பலரும் நடித்து வெளியான திரைப்படம் சின்னத்தம்பி. இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இப்படத்தில் “போவோமா ஊர்கோலம் பூலோகம் எங்கெங்கும்” என்ற பாடலை சொர்ணலதா பாடியிருந்தார். 1991 இல் சிறந்த பின்னணிப் பாடகிக்கான தமிழக அரசு விருது, சினிமா எக்ஸ்பிரஸ் விருது, ஃபிலிம்ஃபேர் விருது என மூன்று விருதுகளை இப்பாடலுக்காக வாங்கியுள்ளார்.

chinna-thambi-prabhu-kushbu-movies-cinemapettai
chinna-thambi

கருத்தம்மா: பாரதிராஜா இயக்கத்தில் ராஜா, மகேஸ்வரி, ராஜஸ்ரீ, சரண்யா பொன்வண்ணன்
என பலரும் நடித்து வெளியான திரைப்படம் கருத்தம்மா. இப்படத்தில் ஏ ஆர் ரகுமான் இசையில் சொர்ணலதா “போறாளே பொன்னுத்தாயி பொல பொலவென்று கண்ணீர் விட்டு” என்ற பாடலை பாடியிருந்தார். இப்பாடலுக்கு தேசிய விருது பெற்ற முதல் பெண் பாடகி இவர்.1994 இல் கலைமாமணி விருது மற்றும் தமிழக அரசு விருது பெற்றுள்ளார்.

காதலன்: ஷங்கர் இயக்கத்தில் 1994 பிரபுதேவா, நக்மா, வடிவேலு பலரும் நடித்து வெளியான திரைப்படம் காதலன். ஏ ஆர் ரகுமான் இசையில் “முக்காலா முகாபலா” பாடலை சொர்ணலதா பாடியிருந்தார். இப்பாடலுக்கான சினிமா எக்ஸ்பிரஸ் விருது மற்றும் ஃபிலிம்ஃபேர் விருதை பெற்றார் சொர்ணலதா.

shankar-kadhalan
shankar-kadhalan

இந்தியன்: 1996இல் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், சுகன்யா, மனிஷா கொய்ராலா என பலரும் நடித்து வெளியான திரைப்படம் இந்தியன். இப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்து இருந்தார். இப்படத்தில் சொர்ணலதா பாடிய “அக்கடான்னு நாங்க” பாடல் சிறந்த பின்னணிப் பாடகிகாக சினிமா எக்ஸ்பிரஸ் விருது மற்றும் ஃபிலிம்ஃபேர் விருது பெற்றது.

முதல்வன்: ஷங்கர் இயக்கத்தில் 1999இல் பாக்ஸ் ஆபீஸ் பெற்ற திரைப்படம் முதல்வன். இத்திரைப்படத்தில் அர்ஜுன், மனிஷா கொய்ராலா, மணிவண்ணன், விஜயகுமார், ரகுவரன் எனப் பலரும் நடித்திருந்தார்கள். இப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்து இருந்தார். இப்படத்தில் “உளுந்து விதைக்கையிலே” பாடலுக்காக சினிமா எக்ஸ்பிரஸ் விருதை சிறந்த பின்னணி பாடகி சொர்ணலதா பெற்றார்.

Mudhalvan

அலைபாயுதே: மணிரத்னம் இயக்கத்தில் காதல் திரைப்படமாக 2002 இல் வெளிவந்தது அலைபாயுதே. இப்படத்தில் மாதவன், ஷாலினி, சொர்ணமால்யா என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். ஏஆர் ரகுமான் இசையில் சொர்ணலதா பாடிய “எவனோ ஒருவன் வாசிக்கிறான்” என்ற பாடல் சினிமா எக்ஸ்பிரஸ் விருது மற்றும் ஃபிலிம்ஃபேர் விருதை பெற்றது.

பூவெல்லாம் உன் வாசம்: எழில் இயக்கத்தில் அஜித், ஜோதிகா இருவரும் நடித்து வெளியான திரைப்படம் பூவெல்லாம் உன் வாசம். இப்படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்திருந்தார். இப்படத்தில் “திருமண மலர்கள் தருவாயா” என்ற பாடலைப் பாடிய சொர்ணலதாவிற்கு சிறந்த பின்னணி பாடகிக்கான ஃபிலிம்ஃபேர் விருது கிடைத்தது.

Trending News