புதன்கிழமை, பிப்ரவரி 5, 2025

இது பிக்பாஸா இல்ல மேட்ரிமோனியா.. திடீர்னு ப்ரொபோஸ் செய்து வெட்கப்பட்ட சவுண்ட்

Biggboss 8: பிக்பாஸ் வீடு இந்த வாரம் முழுவதும் ரொம்ப எமோஷனலாக இருக்கிறது. இதற்கு காரணம் போட்டியாளர்களின் குடும்பத்தினர் வருகை தான்.

அதிலும் நேற்றைய நிகழ்ச்சியில் முத்துவின் அம்மா அப்பா வெள்ளந்தியாக பேசியது அனைவரையும் கவர்ந்து விட்டது. அதேபோல் அவருடைய அம்மா தன் மகனை நினைத்து பெருமைப்படுவதை பார்க்கும் போதே கியூட்டாக இருந்தது.

இப்படி இந்த வாரம் முழுவதும் பல விஷயங்களை நாம் பார்த்தோம். அதில் இன்று போட்டியாளர்களின் நண்பர்கள் வீட்டிற்கு வருகை தருகின்றனர்.

அதன் முதல் படியாக கடந்த சீசன் போட்டியாளர் விஷ்ணு வீட்டுக்குள் வந்திருக்கிறார். அவருடைய வருகை சௌந்தர்யாவுக்காக தான் என்பது அனைவருக்கும் தெரியும்.

திடீர்னு ப்ரொபோஸ் செய்து வெட்கப்பட்ட சவுண்ட்

அதேபோல் ஜாக்லினிடம் சொன்னது போல் சௌந்தர்யா ப்ரொபோஸ் செய்தது பார்க்க நன்றாகத்தான் இருந்தது. அதிலும் சவுண்டுக்கு வெட்கம் எல்லாம் பட தெரியுமா என ஆச்சரியமாகவும் உள்ளது.

அதன்படி தற்போது வெளியாகி உள்ள ப்ரோமோவில் அவர் விஷ்ணுவுக்கு ப்ரொபோஸ் செய்கிறார். அதை ஏற்றுக் கொண்ட விஷ்ணுவும் வெட்கத்தோடு பேசுகிறார்.

இந்த ப்ரோமோவை சௌந்தர்யாவின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ஆனால் நெட்டிசன்கள் இது என்ன பிக்பாஸ் வீடா இல்லை மேட்ரிமோனியா என கலாய்த்து வருகின்றனர்.

Trending News