வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

திமிர் தெனாவெட்டால் மாமா வீட்டில் மரியாதை இழந்த அனிருத்.. ரஜினியே கூப்பிட்டால் கூட தூக்கி எறியும் வாரிசுகள்

Soundarya Rajinikanth avoid music director Anirudh for their third film: “எட்டும் அறிவினில் ஆணுக்கு இங்கே பெண் இளைப்பிள்ளை காண்” என்னும் பாரதியின் கூற்றுப்படி தமிழ் சினிமாவில் ஆண் இயக்குனர்களுக்கு இணையாக பெண்களும் தங்களது கலை திறமையை  சிறப்புற செயல்படுத்தும் இயக்குனர்களாக நிரூபித்து வருகின்றனர்.  உதாரணமாக சுதா கொங்குரா, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் போன்றோர் பல வெற்றி படங்களை கொடுத்து உள்ளனர்.

அவர்களைப் போன்றே ரஜினிகாந்தின் இளைய மகளான சௌந்தர்யா ரஜினிகாந்த் கோச்சடையான் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி வேலையில்லா பட்டதாரி 2 என்ற தனுஷின் படத்தையும் இயக்கி இருந்தார் தற்போது மூன்றாவது ஆக ஒரு படம் இயக்கப் போவதாக அறிவித்துள்ளார் சௌந்தர்யா ரஜினிகாந்த்.

தயாரிப்பாளர் எஸ் தாணுவின் தயாரிப்பில் சௌந்தர்யா இயக்கும் இப்படத்தில் ராகவா லாரன்ஸ் ஹீரோவாகவும், லால்சலாம் போன்றே ரஜினி கேமியோ ரோலிலும் தோன்ற உள்ளதாக தகவல். இசைக்கு ஏ ஆர் ரகுமான் மற்றும் ஜிவி பிரகாஷ் குமார் இடையே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

Also read : LCU கேள்விப்பட்டிருக்கோம் அது என்ன NCU? ரஜினிகாந்த் ஓகே சொல்லி பற்ற வைத்த நெருப்பு

இசை என்று கூறும்போது தான் குடும்பத்திற்குள்ளேயே இசையமைப்பாளரை வைத்திருக்கும் ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா ஏன்? அனிருத் அவர்களை கண்டு கொள்ளவில்லை என்ற கேள்வி மேல் எழும்புகிறது. ரஜினிகாந்த் நடித்த பேட்ட, தர்பார் மற்றும் ஜெயிலர் வரை அனிருத் இசையமைத்திருந்தார்.

அதேபோன்று சௌந்தர்யா ரஜினிகாந்தின் இப்படத்திற்கும் அனிருத் இசையமைத்தால் என்ன? என்று ரஜினிகாந்த் அனிருத்தை சிபாரிசு செய்தாராம். ஆனால் சௌந்தர்யா ரஜினிகாந்த்தோ அனிருத்தின் நடவடிக்கை சரியில்லை எனவும் தலைக்கனத்துடன் ஆட்டிட்யூட் காட்டி வருவதாகவும் இதனால் தன் படத்திற்கு இசையமைப்பாளராக அனிருத் வேண்டாம் என்று கூறி உள்ளார்.

இதற்கு முன்பே ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய லால் சலாம் படத்திற்காக அனிருத்தை இசையமைக்க கேட்க போய் அவர் முடியாது என்று மறுத்து விட, அக்கா தங்கை இருவரும் ஒன்றாக இணைந்து இனி தங்களது படங்களுக்கு அனிருத்தை இசையமைக்க அணுக வேண்டாம் என்று முடிவு எடுத்து உள்ளார்களாம். புகழ் போதை, தலைக்கு ஏறும்போது அருகில் உள்ளவர்கள் கூட தெரியாமல் போவது அனிருத் விஷயத்தில்  நிதர்சனமான உண்மையானது.

Also read : அம்மாடியோ ஒரு காஃபியோட விலையே இவ்வளவா.! இசையை தாண்டி ஹோட்டல் தொழில் கல்லா கட்டும் அனிருத்தின் வருமானம்

Trending News