சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் கடைசியாக வெளியான திரைப்படம் வேலையில்லா பட்டதாரி 2. மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளியான இப்படம் ரசிகர்களிடம் பெரிய அளவில் வெற்றி பெறாமல் கலவையான விமர்சனங்களை பெற்றது. அதனால் சௌந்தர்யா ரஜினிகாந்த் புதிதாக ஒரு படத்தை இயக்க உள்ளதாகவும் இப்படத்தையும் தனுஷ் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
ஆனால் சௌந்தர்யா ரஜினிகாந்த் அதற்கு முன்பே தனது தொழில்நுட்ப கலைஞர்களுடன் இணைந்து ஒரு புதிய முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கூறிவருகின்றனர். அதாவது பேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப் போன்ற ஒரு செயலியை சௌந்தர்யா ரஜினிகாந்த் உருவாக்கியுள்ளார்.
அந்த செயலிக்கு ஹூக் என பெயரிட்டுள்ளார். தற்போது இதற்கான இறுதிகட்ட பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் கூடிய விரைவில் அனைவரின் செல்போனிலும் இந்த ஆப் செயலில் இருக்கும் என கூறுகின்றனர். இந்த செயலியில் 59 செகண்ட் வாய்ஸ் மெசேஜ் பண்ணலாம் எனவும், இது வரைக்கும் எந்த ஒரு ஆப்ளும் இல்லாத வசதிகளை இந்த செயலில் இருப்பதாக கூறியுள்ளனர்.
நேற்று பேஸ் புக், வாட்ஸ் அப் ,மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகள் வேலை செய்யவில்லை. அதனால் நம்ம பேஸ் புக் மார்க்-க்கு 5000 கோடிகளுக்கு மேல் காலி ஆனது. இதனால் மூன்றாவது இடத்தில் இருந்த மார்க் இப்ப ஐந்தாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். ஆறு மணி நேரத்தில் நடந்த இந்த சம்பவம் ஐஸ்வர்யாவின் ஏழாவது அறிவை தொட்டுள்ளது.
கூடிய விரைவில் செயலியின் அறிமுக விழாவில் இந்த செயலியை அறிமுகப்படுத்தப்படும். மேலும் இந்த செயலியை அனைவரும் வரவேற்றால் விரைவில் உலக பணக்காரர்கள் பட்டியலில் சௌந்தர்யாவும் கூடிய விரைவில் இடம் பிடிப்பார் என கூறி வருகின்றனர்.