Biggboss 8: விஜய் டிவியில் 105 நாட்கள் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் சீசன் 8 வெற்றிகரமாக முடிந்துள்ளது. நேற்று கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சி கோலாகலமாக நடந்தது.
அதில் ஆடியன்ஸ் எதிர்பார்த்தது போல் முத்துக்குமரன் டைட்டிலை வென்றுள்ளார். அவருக்கு கோப்பையுடன் 40 லட்சத்து 50 ஆயிரம் பரிசுத்தொகையும் வழங்கப்பட்டது.
ஒரு சாதாரண பையன் வெற்றி பெற்றதை அவரின் ரசிகர்களும் மக்களும் தற்போது கொண்டாடி வருகின்றனர். அதே சமயம் இரண்டாவது இடத்தை பிடித்த சௌந்தர்யாவும் ட்ரண்ட் ஆகி வருகிறார்.
பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்தபோது இவருக்கு ஆதரவும் எதிர்ப்பும் வெளியில் சரிசமமாக இருந்தது. ஆனால் நேற்று மேடையில் அவர் செய்த சம்பவம் அத்தனை எதிர்ப்புகளையும் காலி செய்து விட்டது.
அதாவது முத்துவுக்கு கோப்பையை வழங்கிய பிறகு விஜய் சேதுபதி சௌந்தர்யாவிடம் சில வார்த்தைகள் பேசும் படி கேட்டார். உடனே சவுண்ட் எங்க என்னோட கைய தூக்கிடுவீங்களோன்னு நான் ரொம்ப பயந்துட்டேன்.
பினாலே மேடையை அதிரவிட்ட சவுண்ட்
நல்லவேளை நீங்க அப்படி செய்யல என கேசுவலாக கூறினார். இறுதி மேடை வரை வந்துவிட்டு பரிசு கிடைக்கவில்லை என்றால் அவர்களின் மனநிலை நிச்சயம் வேறு மாதிரி தான் இருக்கும்.
ஆனால் சௌந்தர்யா எனக்கு மட்டும் டைட்டில் கிடைச்சிருந்தா எங்க அப்பாவே கப்ப பிடுங்கி முத்துக்கு கொடுத்திருப்பார் என அசால்ட் செய்திருந்தார்.
இதை அங்கு இருந்தவர்கள் யாரும் நிச்சயம் எதிர்பார்க்கவில்லை. உடனே பலத்த கரகோஷம் அரங்கம் முழுவதும் எதிரொலித்தது.
வெற்றி கிடைக்கவில்லை என்றாலும் அதை ஈசியாக கடந்து சென்ற சௌந்தர்யாவை இப்போது அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
அதேபோல் அவரின் ரசிகர்கள் இதுதான் எங்க சௌந்தர்யா. எங்க பொண்ணு தங்கம் சார் என பயர் விட்டு கொண்டாடி வருகின்றனர்.