விஜய் டிவியின் சூப்பர் ஹிட் சீரியல் ஆன பாரதிகண்ணம்மா சீரியலில் கதாநாயகன், கதாநாயகியை விட சௌந்தர்யா கதாபாத்திரம் ரசிகர்களிடையே பெரிதும் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது.
ஏனென்றால் பிரிந்து வாழும் மகன், மருமகளை சேர்த்து வைக்க மாமியார் சௌந்தர்யா படும்பாடு சீரியலின் ஹைலைட்டாக பார்க்கப்படுகிறது. அத்துடன் சீரியல் துவங்கப்பட்ட போது கம்பீரமான மாமியாராக இருந்த சௌந்தர்யா, பாரதி மற்றும் கண்ணம்மா இருவரை சேர்த்துவைக்க பரிதாபப்படும் மாமியாராக மாறிவிட்டார்.
விவாகரத்துப் பெறுவதற்காக ஆறுமாதம் சேர்ந்து வாழும்படி நீதிபதி சொன்ன உத்தரவின் அடிப்படையில் பாரதி மற்றும் கண்ணம்மா இருவரும் ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்கின்றனர். இன்னிலையில் தற்போது வெளியான ப்ரோமோவில் பாரதி மற்றும் கண்ணம்மா இருவரும் தங்களுடைய குழந்தைகளை பார்க்க நடுராத்திரியில் சௌந்தர்யா வீட்டிற்கு வந்துள்ளனர்.
மீண்டும் வீடு திரும்பும் கண்ணம்மாவை, பாரதியுடன் ஒரே காரில் அனுப்புவதற்காக சௌந்தர்யா போடும் நாடகம் பக்காவாக ஒர்க்அவுட் ஆனது. அந்த சமயத்தில் சௌந்தர்யா, ஹை ஹீல்ஸ் போட்டுக்கொண்டு கரடுமுரடான பாதையில் மிடுக்கான நடையுடன் பாரதிகண்ணம்மா சீரியலில் செம மாஸ் காட்டி உள்ளார்.
அத்துடன் வசதியான வீட்டு மாமியாராச்சே இப்படித்தான் ஹை ஹீல்ஸ் போட்டு கெத்து காட்டுவார் என்று இணையத்தில் சௌந்தர்யாவை நெட்டிசன்கள் கிண்டல் அடிக்கின்றனர். இதுவரை சீரியலில் காண்பிக்கப்பட்ட வில்லத்தனம் செய்யும் மாமியாரை விட கண்ணம்மாவின் மாமியார் படுஜோர் தான்.
மேலும் பாரதிகண்ணம்மா சீரியலில் பாரதி மற்றும் கண்ணம்மாவிற்கு இடையே நடக்கும் சின்ன சின்ன காதல் காட்சிகள் தற்போது ரசிகர்களை வெகுவாக கவர்ந்து கொண்டிருக்கிறது.