வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

பெரிய உலக அழகி-ன்னு நினைப்போ.. ஜாக்குலினை உடல் கேலி செய்த சவுண்டு

பிக் பாஸ் 8 வீட்டில் இருக்கும் சவுந்தர்யா சவுண்டே இல்லாமல் இருக்கிறார் என பார்வையாளர்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகிறார்கள். பெண்கள் வீட்டில் தங்க சவுந்தர்யாவுக்கு பிடிக்கவில்லை. எப்படியாவது ஆண்கள் வீட்டுக்கு செல்ல நினைத்தார். அது நடக்கவில்லை.

மேலும் வந்த நாள் முதல் எதுவுமே செய்யாமல் இருக்கும் சௌந்தர்யாவை கிளம்புங்க.. காத்து வரட்டும் என்றும் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர். இந்நிலையில் இன்று வெளியாகியிருக்கும் மூன்றாவது ப்ரொமோ வீடியோவில் சவுந்தர்யாவின் சத்தமாக தான் உள்ளது.

உடல் கேலி செய்த சவுண்டு

இதுநாள் வரை அமைதியாக இருக்கிறார் என்ற பேச்சு வந்ததால், சௌந்தர்யா எதோ ட்ரை பண்ணுகிறார். ஆனால் அது எல்லாம் ஒன்று cringe-ஆக இருக்கிறது அல்லது கடுப்பேற்றுவது போல இருக்கிறது. இந்த நிலையில், அவர் பேசிய ஒன்று தற்போது பார்வையாளர்களை முகம் சுழிக்க வைத்துள்ளது.

தன் வீட்டில் அரிசி சோறு சாப்பிட மாட்டாராம் சவுந்தர்யா. இந்நிலையில் பிக் பாஸ் வீட்டிலும் அப்படித் தான் இருப்பேன் என அவர் அடம்பிடிக்கிறார். தற்போது வெளியாகியிருக்கும் ப்ரொமோ வீடியோவில், சாப்பிடுவதே ஒரேயொரு சப்பாத்தி. அதிலும் உப்பு. உப்பு சாப்பிட்டால் என் மூஞ்சி அவங்க மூஞ்சி மாதிரி பம்முனு இருக்கும் என ஜாக்குலினை கைகாட்டினார் சவுந்தர்யா.

அதை பார்த்து ஜாக்குலின் மட்டும் அல்ல பிக் பாஸ் பார்வையாளர்களும் முகம் சுளித்தார்கள். இனிமேல் காமெடிக்கு கூட அப்படி சொல்லாத, எனக்கு பிடிக்கலனு சவுந்தர்யாவிடம் கூறினார் ஜாக்குலின். இதை பார்த்த ரசிகர்கள், பெரிய உலக அழகின்னு நினைப்போ ன்னு சௌந்தர்யாவை தாளித்து வருகிறார்கள் ரசிகர்கள்.

Trending News