வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

ஒரே Phone call, 17 லட்சம் போச்சு.. கதறி அழுத பிக் பாஸ்-8 சௌந்தர்யா

பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில், நேற்றைய தினம் கதை சொல்லல் டாஸ்க் நடந்தது. அதில் ஒவ்வொருவரும் தங்களது வாழ்க்கையில் கடந்த வந்த பாதை குறித்து பேசினர். அந்த வரிசையில் போட்டியாளராக உள்ளே இருக்கும், செளந்தர்யா தன் கதையை எமோஷனலாக பகிர்ந்து கொண்டார்.

அவர் பேசுவதற்கு முன்பே அழ ஆரம்பித்துவிட்டார். ஏற்கனவே அவருக்கு என்று ரசிகர் பட்டாளமே இருக்கும் நிலையில், அவர் அழுவதை பார்த்த ஆண் ரசிகர்களால் தாங்கி கொள்ளவே முடியவில்லை. அவர் பேசியதாவது, “நான் கடந்த வந்த பாதையை சொல்வதே எனக்கு பெரும் கனவாக இருந்தது. சௌந்தர்யா யார் என்று சொல்ல வேண்டும் என்பதால் தான் நான் பிக் பாஸ் வீட்டிர்க்குள்ளையே வந்தேன்..”

ஒரே phone கால், எல்லாம் போச்சு!

” சின்ன வயதில் இருந்தே என்னுடைய குரல் இப்படித்தான் இருக்கும். பள்ளியில் இருந்தே என்னுடைய குரல் சார்ந்த கிண்டலை நான் எதிர்கொண்டு வந்திருக்கிறேன். பலர், இப்படிப்பட்ட ஒரு பொண்ணுக்கு, இப்படிப்பட்ட குரலா என்று குறையாக பார்த்தார்கள்.”

“ஆரம்பத்தில், வாழ்க்கையில் நான் என்ன செய்யப்போகிறேன் என்பதே எனக்கு குழப்பமாக இருந்தது. சினிமா என்றால் எனக்கு அவ்வளவு பிடிக்கும். எந்த ஒரு பின்னணியும் இல்லாமல் தான் நான் இந்த இடத்திற்கு வந்திருக்கிறேன்..”

“கிட்டத்தட்ட 8 வருடங்களாக இந்தத்திரைத்துறையில் உழைத்து 17 லட்சம் சம்பாதித்து இருந்தேன் ஆனால் அது ஒரே போன்காலில் காலியாகிவிட்டது. ஆம், மோசடி முறையில் யாரோ அந்தப்பணத்தை அப்படியே சுருட்டி விட்டார்கள். இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு கூட நான் என்னுடைய அப்பாவிடம் கடன் வாங்கிதான் வந்தேன். என் பணம் தொலைந்தது அவருக்கே தெரியாது”

“எனக்கு எப்போதும் உறுதுணையாக இருந்தது என் அப்பா மட்டும் தான். ஐ லவ் யூ டாடி” என்று சொல்லி முடித்திருக்கிறார். இதை கேட்ட இவரது ரசிகர்கள் ரொம்ப பீல் செய்து வருகிறார்கள்.

Trending News