தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமாவையே தன் கைக்குள் வைத்திருந்தவர்தான் நடிகை சௌந்தர்யா. அவர் அறிமுகமானதிலிருந்து கடைசிவரை நம்பர் ஒன் நடிகையாக வலம் வந்தார்.
ஒரு மொழிகளில் மட்டுமல்ல. ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமாவிலும் அவர்தான் முன்னணி நடிகர்களின் பிரதான கதாநாயகியாக வலம் வந்தார். அது மட்டுமில்லாமல் அன்றைய காலகட்டங்களில் நடித்த பல நடிகர்களும் சௌந்தர்யாவுடன் ஒரு படமாவது நடித்துவிட வேண்டும் எனத் துடித்தனர்.
அப்படிப்பட்ட சௌந்தர்யா ஏப்ரல் 17ஆம் தேதி 2004 ஆம் ஆண்டு ஒரு விமான விபத்தில் உயிரிழந்தார். அவர் இறக்கும் போது அவரது வயிற்றில் மூன்று மாத கரு இருந்தது குறிப்பிடத்தக்கது. சௌந்தர்யாவின் ஆரம்ப காலகட்டம் முதல் கடைசி வரை அவருக்கு உறுதுணையாக இருந்தவர் இயக்குனர் உதயகுமார்.
கடைசியாக அவர் விமானத்தில் புறப்பட்டுப் போகும் நாளுக்கு முந்தைய நாள் உதயகுமாரின் வீட்டில் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தாராம். அப்போது விரைவில் சினிமாவை விட்டு விலகி விடுவேன் எனவும், இப்போது நடிப்பதுதான் கடைசி படம் எனவும் கூறினாராம்.
மேலும் சினிமாவை விட்டு விலகி குழந்தையுடன் நேரத்தை செலவிட வேண்டும் என ஆசையாக இருப்பதாகவும் கூறியதாக உதயகுமார் ஒருமுறை மேடையில் கூறி கண்ணீர் வடித்தார்.
அதனைத் தொடர்ந்து சௌந்தர்யா அன்று சொன்னது அப்படியே நடந்துவிட்டது, அவர் நடித்துக் கொண்டிருந்த படம்தான் அவரது கடைசி படமாகிவிட்டது எனவும், அவர் தன்னுடைய குழந்தையை மிகவும் எதிர்பார்த்துக் கொண்டிருந்ததாகவும் கூறினார்.
![soundharya-cinemapettai-01](https://www.cinemapettai.com/wp-content/uploads/2021/06/soundharya-cinemapettai-01.jpg)