ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 29, 2024

1000 கோடியில் உருவாகும் ராமாயணம் படத்தில்.. ராவணனாக நடிக்கிறாரு நம்ப தென்னிந்திய நடிகர்..!

South Indian actor playing the role of Ravana in Ramayanam: சினிமாவில்  வரலாற்று கதைகள் அவ்வப்போது படங்களாக வருவதுண்டு பல நடிகர்களும் காலத்திற்கு ஏற்ப நடித்து முடித்தாகிவிட்டது. இருந்த போதும் புதுப்புது நட்சத்திர காமினேஷங்களைக் கொண்டு நவீன தொழில்நுட்பத்துடன் மீள் உருவாக்கம் செய்து வருகின்றனர் இன்றைய தலைமுறையினர். 

வரலாற்றில் இடம்பெற்ற எவர்கிரீன் காவியமான ராமாயணத்தை படமாக எடுக்கும் போது முன்னணி நடிகர்கள் பெரும்பாலும் தேர்ந்தெடுக்கும் கதாபாத்திரம் ராமனாகவே இருக்கும். ஆனால் இங்கு ஒரு புகழ்பெற்ற நடிகர் எனக்கு இராவண கதாபாத்திரமே வேண்டும் என்று அடம் பிடித்து அதை ஏற்று உள்ளார். அவருக்கு தெரிந்திருக்கு இராவணன் தான் ரியல் ஹீரோ என்று. சீதை தீக்குளித்த போது சீதையின் கற்பும்  மட்டும் அல்ல ராவணனின் கற்புமல்லவா வெட்ட வெளிச்சம் ஆகியது. 

அமீர்கான் நடித்த தங்கல் படத்தை இயக்கிய பாலிவுட் இயக்குனர் நிதீஷ் திவாரி இயக்கத்தில் ஆயிரம் கோடி பட்ஜெட்டில் மேம்படுத்தப்பட்ட கிராபிக்ஸ் எஃபெக்ட்ஸை பயன்படுத்தி பிரம்மாண்டமாக உருவாக உள்ளது ராமாயணம். பான் இந்தியா மூவியாக உருவாவதால் கதாபாத்திரத்தை தேர்வு செய்வதில் நீடித்த குழப்பத்துடன் இருந்தனர் படக் குழுவினர். முதலில் ராமனாக நடிக்க கே ஜி எஃப் ஹீரோ ராக்கி பாயை அணுகினார்களாம். 

Also read : கே ஜி எஃப் நடிகரை வளைத்து போட்ட கார்த்தி பட இயக்குனர்.. வாயைப் பிளக்கும் கோலிவுட் பிரபலங்கள்.!

கே ஜி எஃப் வெற்றிக்கு பின் யஷ்ஷின் அடுத்த படம் பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்த நிலையில் கடைசியாக கீத்து மோகன் தாஸ் படத்தில் நடித்து வருகிறார் யாஷ். இந்நிலையில் ராமாயணத்தில் நடிக்க கேட்டபோது ராமனாக வேண்டாம். ராவணனாக நடிக்க ஆசைப்படுகிறேன் கெத்து என்று கெத்து காட்டினாராம் யாஷ். 

yash-actor
yash-actor

இதில் ராமனாக அனிமல் படத்தில் நடித்த ரன்பீர் கபூரும் சீதையாக சாய்பல்லவியும் நடிக்க உள்ளனர். இந்த ஆண்டு ஏப்ரல் 17ஆம் தேதி படப்பிடிப்பு துவங்க உள்ளதாகவும் 2025 இல் இத்திரைப்படம் திரைக்கு வரும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். 

சமீபத்தில் இதே போன்று ராமாயணத்தை மீள் உருவாக்கம் செய்து பிரபாஸ் சைஃப் அலிகான், கீர்த்தி சனோன், தேவதத்தா நாகே நடித்த ஆதிபுருஷ் திரைப்படம் மிரட்டும் தொழில்நுட்பத்தில் வெளிவந்த போதும் ஆங்காங்கே உணர்வு ரீதியான காட்சிகளை ஏற்படுத்த தவறி திரைக்கதை சற்று சொதப்பி பின்வாங்கி போனது என்பது குறிப்பிடத்தக்கது. 

Also read : ஆதிபுருஷ் கொடுத்த மரண அடி.. 1000 கோடி இயக்குனரால் தல தப்பிய பிரபாஸ்

Trending News