சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

நம்ம மார்க்கெட்ட வச்சு ஸ்கெட்ச் போடும் அக்கடதேச சாக்லேட் பாய்.. வேற லெவலில் யோசிக்கும் சூர்யா- சுதா கொங்கரா

Surya-Sudha Kongaraa: நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். வரலாற்று கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த படம் பான் இந்தியா மூவியாக ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்த படத்தின் கிலிம்ஸ் வீடியோக்கள் வெளியானதிலிருந்து தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

கங்குவா திரைப்படம் கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் இருக்கும் பொழுது கூட, சூர்யா அடுத்து யாருடன் படம் பண்ண போகிறார் என்று அவருடைய ரசிகர்களுக்கு ஒரு தெளிவில்லாமல் இருந்தது. சூர்யா ரசிகர்களுடைய மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருந்தது அவர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க இருக்கும் வாடிவாசல் படம் தான்.

Also Read:படத்தில் நடிக்க பாரில் வேலை செய்த நடிகர்.. சூர்யாவால் வாய்ப்பு கிடைத்து தற்போது காணாமல் போன வில்லன்.!

வாடிவாசல் படம் எப்போது தொடங்கும் என்று தெரியாமல் சூர்யாவின் ரசிகர்களே ரொம்பவும் அலுத்து போய் விட்டார்கள். நடிகர் சூர்யா மற்றும் இயக்குனர் வெற்றிமாறன் இந்த படத்தைப் பற்றி சமீபத்தில் எதுவும் பேசவும் இல்லை. ஆனால் கங்குவா திரைப்படத்திற்கு பிறகு வாடிவாசல் தொடங்க வாய்ப்பே இல்லை என்பது மட்டும் உறுதியாகிவிட்டது.

இதற்கு காரணம் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் சூரி நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி அடைந்த விடுதலை படத்தின் அடுத்த பாகத்தை எடுக்கும் வேலைகளில் இறங்கி விட்டார் இயக்குனர். மேலும் சூர்யாவும் தன்னுடைய அடுத்த படத்தின் அப்டேட் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு விட்டார்.  சூர்யாவுக்கு மிகப்பெரிய ஹிட் படமான சூரரை போற்று படத்தை கொடுத்த சுதா கொங்கரா உடன் அடுத்த படத்தில் இணைகிறார்.

Also Read:ரீ-ரிலீஸ் செய்து வசூலை வாரி குவித்த சூர்யாவின் வாரணம் ஆயிரம்.. களத்தில் தீயாய் நிற்கும் சுப்ரமணியபுரம்

மேலும் இந்த படத்தில் நடிகர் சூர்யாவுடன் அக்கடதேசத்தின் நடிகர் ஒருவரும் இணைகிறார். தற்போது தமிழ் சினிமாவில் தென்னிந்திய நடிகர்கள் யாரையாவது முக்கியமான கேரக்டரின் நடிக்க வைப்பது என்பது ட்ரெண்டாகி வருகிறது. சமீபத்தில் ரஜினியின் ஜெயிலர் படத்தில் கூட மோகன்லால், சிவராஜ் குமார், நவீன் ஆகியோர் இணைந்தனர்.

தற்போது சூர்யா மற்றும் சுதா கொங்காரா இணையும் இந்த படத்தில் மலையாள நடிகர் துல்கர் சல்மான் முக்கியமான ரோலில் நடிக்கவிருக்கிறார். துல்கர் சல்மானுக்கு ஏற்கனவே மலையாள சினிமாவில் மார்க்கெட் கெட்டியாக இருக்கிறது. இந்நிலையில் காதல் படங்களின் மூலமே தமிழ் சினிமாவில் வரவேற்பை பெற்ற துல்கர் தற்போது தமிழில் வித்தியாசமான கதை களத்தில் நடித்து மார்க்கெட்டை பிடிக்க திட்டம் போட்டு இருக்கிறார்.

Also Read:கங்குவா-விற்கு முன் சூப்பர் ஹிட் படத்தை வைத்து வசூலை அள்ளும் சூர்யா.. 500 தியேட்டர்களில் ரீ ரிலீஸ்

Trending News