வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

South Indian சினிமா பிரின்ஸி.. சாய்பல்லவியின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சாய்பல்லவி. நீலகிரி மாவட்டம் கோத்தகிரியைச் சேர்ந்த இவர், கோயம்புத்தூரில்தான் படித்து வளர்ந்தார்.

மருத்துவர் படிப்பை முடித்திருந்தாலும், சினிமாவின் மீதுகொண்டிருந்த விருப்பத்தால் கடந்த 2005 ஆம் ஆண்டு பிரசன்னா நடிப்பில் வெளியான கஸ்தூரி மான் 2008 ல் ஜெயம்ரவி ஹீரோவாக நடித்த தாம்தூம் ஆகிய படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்திருந்தார்.

அதன்பின், 2015 ஆம் ஆண்டு அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான பிரேமம் படத்தில் மலர் டீச்சர் கேரக்டரில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். சூர்யா, தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த அவர், இன்று மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகையாக தென்னிந்தியாவின் பிரின்ஸி என்று அழைக்கப்பட்டு வருகிறார்.

அமரன் படம் ஹிட்டை தொடர்ந்து இந்தி சினிமாவில் சாய்பல்லவி

சமீபத்தில் சிவகார்த்திகேயனுடன் இவர் இணைந்து நடித்த படம் அமரன். இப்படத்தில் இந்து ரெபேகா வர்கீஸ் என்ற கேரக்டரில் நடித்திருந்தார். இப்படம் சூப்பர் ஹிட்டாகி ரூ.250 கோடிக்கு மேல் வசூல் குவித்திருக்கும் நிலையில், இப்படத்தில் சாய்பல்லவியின் கேரக்டரும், அவர் நடிப்பு என சினிமா விமர்சகர்களால் பாராட்டப்பட்டு வருகிறது. இப்படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் சாய்பல்லவி என பலரும் கூறி வருகின்றனர்.

அந்தளவுக்கு தான் நடிக்கும் படங்களில் ஏற்கும் கதாப்பாத்திரங்களில் தத்ரூபமாக நடித்து ரசிகர்களின் அபிமானத்தைப் பெற்று வருகிறார் சாய்பல்லவி. அமரன் ஆடியோ நிகழ்ச்சியில் கூட மணிரத்னம் அடுத்த படத்தில் உங்களுடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாக தெரிவித்திருந்தார்.

தற்போது நிதிஷ் திவாரி இயக்கி வரும் ராமாயணம் படத்தில் சீதையாக சாய்பல்லவி நடித்து வருகிறார். 2 பாகங்களாக உருவாகும் இப்படம் வரும் 2026 ஆம் ஆண்டு, 2027 ஆம் ஆண்டு தீபாவளிக்கு 2 படங்கள் ரிலீஸாகவுள்ளன. இதில் நடிக்க ரூ. 6 கோடி சம்பளம் பெற்றுள்ளார். அதேபோல் அமீர்கான் தயாரிப்பு நிறுவனம் சார்பில் ஒரு படத்தில் இந்தியில் நடித்து வருகிறார்.

இப்படி முன்னணி இயக்குனர்கள் தங்கள் படங்களில் நடிக்க வைக்க விரும்பும் சாய்பல்லவிக்கு ரூ.40 கோடி மதிப்பில் சொத்துகள் இருக்கலாம் என கூறப்படுகிறது. இவர் சினிமாவில் நடித்தாலும் விளம்பரங்களில் நடிப்பதில்லை என்பதை கொள்கையாகவே வைத்திருக்கிறார்.

Trending News