புதன்கிழமை, ஜனவரி 15, 2025

15 வயதில் எஸ்பிபி எடுத்துக் கொண்ட புகைப்படம்.. அதிக அளவில் குவியும் லைக்ஸ்!

தமிழ் ரசிகர்களுக்கு சிம்மசொப்பனமாக இருந்து வந்தவர் தான் பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம். தமிழ் திரையுலகில் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் மொழிகளில் முன்னணி பாடகராக வலம் வந்தவர்தான் எஸ்.பி. பாலசுப்ரமணியம்.

இவர் 40 ஆயிரம் பாடல்களுக்கு மேலான பாடல்களை 16 மொழிகளில் பாடியுள்ளார். இவர் ஒரு டப்பிங் ஆர்ட்டிஸ்டாகவும் வெற்றி பெற்றவர். 6 நேஷனல் பிலிம் விருதுகளை பெற்றுள்ளார்.

அவர் வயதை கணக்கு போட்டு பார்த்தால் பிறந்ததிலிருந்து ஒரு நாளைக்கு இரண்டு பாடல்கள்  பாடியுள்ளாராம். என்ன ஒரு ஆச்சரியம், வாழ்க்கை முழுவதும் இசைக்காகவே அர்ப்பணித்தவர்.

கடந்த செப்டம்பர் மாதம் 2020ஆம் ஆண்டு கொரோனா பாதிப்பால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் எஸ்பிபி. இதற்காக பல சினிமா பிரபலங்கள்,  ரசிகர்களுக்கு துடி துடித்துப் போனார்கள்.

எஸ்பிபியின் இளம் வயதில் அதாவது 15 வயது இருக்கும் போது எடுத்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

spbb
spbb

Trending News