புதன்கிழமை, ஜனவரி 15, 2025

அப்பா SPB கோடிக்கோடியாய் சம்பாதித்ததை அழிக்கும் மகன்.. சர்ச்சையை கிளப்பிய பிரபலம்

மறைந்த பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் கஷ்டப்பட்டு பாடி சம்பாதித்ததை அவரது மகன் இஸ்டத்திற்கு செலவு செய்து அழிப்பதாக பிரபலம் ஒருவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளது எஸ்பிபி குடும்பத்தினரை சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது.

பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் தமிழில் மட்டுமல்லாமல் இந்திய ரசிகர்களையும் கவர்ந்த பாடகர்களில் ஒருவர். அனைத்து மொழிகளிலும் ஏகப்பட்ட பாடல்களைப் பாடி அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தவர்.

இவர் சமீபத்தில் குரானா தொற்று ஏற்பட்டு காலமானார். இவருக்கு எஸ்பி சரண் என்ற மகன் உள்ளார். அவரும் பின்னணி பாடகர் தான். ஆனால் அதோடு மட்டுமில்லாமல் ரியாலிட்டி ஷோக்களில் நடுவராகவும் பணியாற்றியுள்ளார்.

அதுபோக எஸ் பி பாலசுப்ரமணியம் பெயரில் பல படங்களை தயாரித்துள்ளார். அப்படி எஸ் பி பாலசுப்பிரமணியம் கோடிகோடியாய் சம்பாதித்ததை படம் தயாரிக்கிறேன் என மொத்தமாக எஸ்பி சரண் அழித்துவிட்டதாக பிரபலமும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

எஸ் பி பாலசுப்பிரமணியத்திற்கு சுமார் 100 கோடிக்கு மேல் சொத்து உள்ளதாம். அதை வைத்து படத் தயாரிப்பில் இறங்க ஆசைப்பட்ட எஸ்பிபி சரண் தயாரித்த பல படங்கள் தொடர் தோல்விகளை சந்தித்து பல நஷ்டங்களை ஏற்படுத்திய விட்டதாம்.

இந்த தகவலை பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார். இதைக் கேள்விப்பட்ட எஸ் பி பாலசுப்ரமணியம் குடும்பத்தினர் வருத்தத்தில் இருப்பதாக செய்திகள் கிடைத்துள்ளன.

spb-sp-charan-cinemapettai
spb-sp-charan-cinemapettai

Trending News