புதன்கிழமை, ஜனவரி 15, 2025

என்னை இமயம் போல் உயர்த்தியது இந்தப் பிரபலம் தான்.. இளையராஜா வெளியிட்ட நெகழ்ச்சியான சம்பவம்!

இளையராஜா பல பிரபலங்களுடன் மனக்கசப்பு, சண்டைகள் இருந்தாலும். ஒருத்தரால் மட்டுமே சினிமாவில் இமயம் போல் உயர்ந்து உள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

இளையராஜா மற்றும் எஸ்பிபி இடையிலான நட்பு வார்த்தைகளால் சொல்ல முடியாது. எஸ்பிபி மருத்துவமனையில் இறுதி நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும் போது யாரை பார்க்க விரும்புகிறீர்கள் என்று கேட்டதற்கு இளையராஜாவை பார்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாராம்.

ஆனால் மருத்துவர் விதிமுறைகளை தாண்டி இளையராஜா அங்க போக முடியாத நிலைமை, அதற்குப் பின்னர் தான் இளையராஜா எழுந்துவா எஸ்பிபி என்ற ஒரு வீடியோவை வெளியிட்டு இருந்தார்.

அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அந்த வீடியோவை பார்த்தவுடன் எஸ்பிபி முத்தமிட்டார் என்று இளையராஜா தெரிவித்திருப்பது புல்லரிக்க வைத்துள்ளது.

சிறுவயதிலிருந்து வாடா போடா என்று பேசிக்கொண்டு பல சண்டைகளை போட்டு இருக்கிறோம். மேடைக் கச்சேரிகளில் தன்னுடைய பாடலை பாடுவது மட்டுமில்லாமல் என்னைப் பற்றி புகழ்ந்து பேசாமல் மேடையை விட்டு இறங்க மாட்டார் எஸ்பிபி.

sp balasubramaniam
sp balasubramaniam

இப்படித்தான் உலக அளவில் என்னை உயர்த்தி விட்டார், ஆனால் இவ்வளவு சீக்கிரமாக என்னைவிட்டு பிரிவார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. நாங்கள் இருவரும் ஒரு பாடலை உருவாக்கும் போது பல சண்டைகளை போட்டுள்ளோம்.

அது வியாபார ரீதியாக இருந்தாலும் நட்பு ரீதியாக இன்றுவரை எஸ்பிபி என்னுடன் நெருக்கமாக தான் உள்ளார் என்று இளையராஜா சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். இவர்கள் இருவருக்கும் இருக்கும் நட்பை பார்த்து கோலிவுட் வட்டாரமே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

Trending News