வியாழக்கிழமை, ஜனவரி 9, 2025

சட்டப்பேரவை நடைபெற்ற அனைத்து நாட்களும் வந்த ஒரே முதல்வர்.. சபாநாயகர் புகழாரம்!

சட்டப்பேரவை நடைபெற்ற அனைத்து நாட்களும் அதில் கலந்து கொண்ட ஒரே முதலமைச்சர் தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்கள் என்று சட்டப்பேரவையில் சபாநாயகர் தனபால் புகழ்ந்து பேசியுள்ளார்.

அதேபோல் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மக்களுக்காக பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தும் மசோதாவை நிறைவேற்றி தமிழக மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

அதுமட்டுமில்லாமல் அரசு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர் சமுதாய மக்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதற்கான தற்போது தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்கள் நிறைவேற்றியுள்ளார்.

அதேபோல் விவசாயிகளின் கடன் சுமையை குறைப்பதற்காக, பயிர் கடன் தள்ளுப, சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு, விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்குவது, என பல திட்டங்களை செயல்படுத்தி உள்ளார்.

மேலும் கொரோனா நோய் தொற்றின் வீரியம் குறையாத நிலையில் மாணவர்கள் பொது தேர்வை எழுதுவது மிகவும் ஆபத்தானது என்று 9, 10 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்கள் பொது தேர்வுகள் எதுவுமின்றி தேர்ச்சி பெற்றனர் என்று சட்டப்பேரவையில் அறிவித்தார்.

இறுதியாக சபாநாயகரே பெருமைப்படும் அளவிற்கு சட்ட பேரவையில் நடைபெற்ற அனைத்து நாட்களும் கலந்துகொண்டு மக்களின் நலனுக்காக பல திட்டங்களை அறிமுகப்படுத்தியவர் தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள்தான். இதன் காரணமாகவே பலர் தரப்பிலிருந்து தமிழக முதல்வருக்கு அமோக ஆதரவு கிடைத்து வருகிறது.

Trending News