வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

கமல் இல்லன்னா, அமரன் இல்ல.. பூரித்துப்போன இயக்குனர்

Kamal : இப்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது அமரன் படம். கிட்டத்தட்ட 150 கோடி வசூலை தாண்டி சக்கை போடு போட்டு வருகிறது. மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை தழுவி இந்த படம் எடுக்கப்பட்டிருந்தது.

இதில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடித்துள்ள நிலையில் கமல் தனது ராஜ்கமல் நிறுவனத்தின் மூலம் இப்படத்தை தயாரித்திருந்தார். அமரன் படத்தின் வெற்றியை தொடர்ந்து இப்படத்தின் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்தார்.

அந்த வகையில் கமல் பற்றி அவர் பேசிய வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது. அதாவது பிக் பாஸ் நிகழ்ச்சியில் பணியாற்றிய போதே ராஜ்குமாருக்கு கமலுடன் பழக்கம் ஏற்பட்டு இருந்ததாம். அப்போது இவரது கதை மிகவும் பிடித்துப் போக தனது தயாரிப்பு நிறுவனத்தில் ஒரு படம் பண்ண சொல்லி உள்ளார்.

கமல் பற்றி பேசிய அமரன் பட இயக்குனர்

ஆனால் தான் அமரன் படத்தின் ப்ராஜெக்ட் பற்றி சொன்னபோது கமல் தயாரிக்க சம்மதித்தாராம். மேலும் படத்தின் பட்ஜெட் பெரிதாகிக் கொண்டே போகும் போது கமல் முன் வந்து தான் தயாரித்தாராம். இதுபோன்ற ஈகோ இல்லாத மனிதரை பார்க்கவே முடியாது என்று ராஜ்குமார் பெரியசாமி கூறினார்.

பொதுவாக கமல் தான் நடிக்கும் மற்றும் தயாரிக்கும் படங்களில் கதைகளில் அதிக ஈடுபாடு செலுத்துவார் என்று ஒரு விமர்சனம் வருவதுண்டு. இதனால் இயக்குனர்கள் தங்கள் விருப்பப்படி படத்தை எடுக்க முடியவில்லை என்றும் பல கருத்துக்கள் வந்ததுண்டு.

ஆனால் ராஜ்குமார் பெரியசாமி பேசுகையில் கமல் கதையில் தலையிடுவார் என்று சொல்வதெல்லாம் கட்டுக்கதை தான். என்னை பொருத்தவரையில் நான் அமரன் படத்திற்காக கேட்ட எல்லாத்தையும் அவர் செய்து கொடுத்தார்.

இவ்வளவு பெரிய இடத்தில் இருந்தும் துளி கூட கர்வம் இல்லாத மனிதர் தான் கமல். இப்படி ஒருவரை பார்ப்பது மிகவும் அரிது. கமல் சார் இல்லைன்னா இன்னைக்கு அமரன் இல்ல என்று பூரித்துப் போய் பெருமிதமாக ராஜ்குமார் பெரியசாமி ஊடகத்தில் பேட்டி கொடுத்திருந்தார்.

Trending News