வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

எதிர்கொள்வோம், எதிரி கொல்வோம்.. கங்குவா ட்ரெய்லரில் உள்ள சிறப்பு அம்சங்கள்

Kanguva : சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் கங்குவா படத்தை ஞானவேல் தயாரித்திருக்கிறார். இதில் திஷா பதானி, பாபி தியோல் போன்ற முக்கிய பிரபலங்கள் நடித்துள்ள நிலையில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

ரிலீஸ் ட்ரெய்லர் என்று படக்குழு இந்த ட்ரெய்லரை வெளியிட்டுள்ள நிலையில் பல சஸ்பென்ஸ்களை உடைத்து இருக்கிறது. அதில் நிகழ்காலம் மற்றும் கடந்த காலம் ஆகியவற்றை ஒப்பிட்டு ஒவ்வொரு ஷாட்டும் இடம் பெற்று இருக்கிறது. ஒருபுறம் காட்டுவாசியாக சூர்யா மிரட்டுகிறார்.

மற்றொருபுறம் நிகழ்காலத்தில் மாடர்ன் உடையில் சண்டை காட்சிகளில் பின்னி பெடல் எடுக்கிறார். மேலும் படத்தில் பெரும்பாலான காட்சிகள் கடந்த காலத்துடன் நிகழ்காலம் ஒப்பிடும் படியாக எடுக்கப்பட்டிருக்கிறது.

கங்குவா ட்ரெய்லரில் உள்ள சிறப்பு அம்சங்கள்

இரண்டிலுமே சூர்யா தனது வித்யாசத்தை காட்டி இருக்கிறார். இந்த ட்ரெய்லரில் துரோகம், கௌரவம் என பல வசனங்கள் இடம் பெற்ற நிலையில் தேவி ஸ்ரீ பிரசாந்தின் இசை பெரிய அளவில் பேசப்பட்டிருக்கிறது. மேலும் வருகின்ற நவம்பர் 14 ஆம் கங்குவா படம் ரிலீஸ் ஆக உள்ளது.

ஆகையால் படக்குழு இப்போதே ப்ரோமோஷன் வேளையில் இறங்கி இருக்கிறது. இப்போது தான் அமரன் படம் வெளியாகி ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பு பெற்ற நிலையில் அதை கங்குவா படம் மிஞ்சுகிறதா என்பது படம் வெளியானால் தான் தெரியவரும்.

பலமுறை கங்குவா ரிலீஸ் தள்ளிப்போன நிலையில் இந்த முறை கண்டிப்பாக வெளியாகும் என்ற நம்பிக்கையில் சூர்யா ரசிகர்கள் ஆர்வமாக படத்தை பார்க்க காத்திருக்கிறார்கள். அந்த நம்பிக்கையை பூர்த்தி செய்யும் வகையில் ட்ரெய்லரும் சிறப்பாக வந்திருக்கிறது.

Trending News