வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

வசூலில் உச்சத்தைத் தொட்ட ஸ்பைடர்மேன்.. அடேங்கப்பா! இத்தனை ஆயிரம் கோடியா

எழுத்தாளர்கள் க்ரிஷ் மெக்கென்னா, எரிக் சோம்மர்ஸ் ஆகியோர் எழுதிய கதைகாளத்துடன் உருவான படம் ஸ்பைடர் மேன் நோ வே ஹோம். இப்படத்தை மார்வெல் மற்றும் சோனி தயாரித்து இருந்தார்கள். கடந்த பாகம் ஸ்பைடர் மேன் பார் பிரம் ஹோம் முடிந்த இடத்திலிருந்து படத்தின் கதை ஆரம்பிக்கிறது.

ஸ்பைடர் மேன் நோ வே ஹோம் திரைப்படத்தில் ஸ்பைடர்மேன் முந்தைய படங்களில் நடித்த டாம் ஹாலண்ட், ஜிண்டாயா, ஜேகப், மாரிஸா டோமீ உள்ளிட்ட பலரும் இந்தப் பாகத்திலும் நடித்துள்ளனர். இப்படத்தில் நடித்த நடிகர்கள், கிராபிக்ஸ் காட்சிகள், பின்னணி இசை எல்லாம் படத்தில் சிறப்பாக அமைந்திருப்பதால், இந்த வருடத்தின் சிறந்த சூப்பர் ஹீரோ படம் என்று பலரும் பாராட்டுகிறார்கள்.

இப்படத்தின் பல ட்ரைலர்கள் ஏற்கனவே வெளியான நிலையில் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு குறையும் என கருதப்பட்டது. ஆனால் படத்தில் அடுத்தடுத்து ட்விஸ்ட் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்கள். இந்தியா முழுவதும் தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், ஹிந்தி ஆகிய மொழிகளில் டிசம்பர் 16 ஆம் தேதி ஸ்பைடர் மேன் நோ வே ஹோம் திரைப்படம் வெளியானது.

அதிக எதிர்பார்ப்புடன் வெளியான இப்படம் 1500 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. இப்படம் வெளியான முதல் வாரத்தில் 2 மடங்கு கூடுதலாக, 4500 கோடி வசூலை வாரி குவித்துள்ளது. ஸ்பைடர் மேன் நோ வே ஹோம் படம் அமெரிக்காவில் மட்டும் 2,000 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முதல் வாரத்திலேயே அதிக வசூல் செய்த அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் முதலிடத்தில் உள்ளது. இதற்கு அடுத்தபடியாக அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார் இரண்டாவது இடத்தைப் பிடித்திருந்தது. தற்போது உலக அளவில் முதல் வாரத்தில் அதிக வசூல் செய்த மூன்றாவது படம் என்ற சாதனையை ஸ்பைடர்மேன் நோ வே ஹோம் படம் பெற்றுள்ளது.

Trending News