ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

சொந்த விருப்பத்தில் அட்ஜஸ்ட்மென்ட் செஞ்ச தப்பு இல்லையா? வண்டவாளத்தை அம்பலப்படுத்திய குட்டி பத்மினி

Actress Kutty Padmini Open Talk: சமீப காலமாகவே மூத்த நடிகைகள் முதல் இளம் நடிகைகள் வரை அட்ஜஸ்ட்மென்ட் பற்றி வெளிப்படையாகப் பேசி வருகின்றனர். அதிலும் சினிமாவில் இருக்கும் நடிகைகளுக்கு பெருசா பாதுகாப்பு இல்லை என்றும், அட்ஜஸ்ட்மென்ட் குறித்த மொத்த சீக்ரெட்டையும் நடிகை குட்டி பத்மினி சமீபத்திய பேட்டியில் பேசி பகீர் கிளப்பி உள்ளார்.

சினிமாவில் ஹீரோயினாக நடிக்கும் நடிகைகள் ஆரம்பத்தில் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், ஹீரோ என எல்லாரையும் அட்ஜஸ்ட்மென்ட் செய்யும் கட்டாயத்தில் இருந்தனர். ஆனால் தற்போது பிஆர்ஓ உடன் வரை, குடும்ப குத்து விளக்காக நடிக்கக்கூடிய நடிகைகள் படுக்கையை பகிர்ந்து கொள்ள வேண்டியதாக உள்ளது.

ஒரு நடிகை தன்னுடைய சொந்த விருப்பத்தின் பெயரில் அட்ஜஸ்மென்ட் செய்தால் தப்பில்லை, அதற்கான மொத்த உரிமையும் அவருக்கு உண்டு. ஆனா கட்டாயப்படுத்தினால் தான் அது தவறான செயல் என்று குட்டி பத்மினி வெளிப்படையாக பேசினார். மேலும் இந்த அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை வாரிசு நடிகைகளுக்கு ஏற்படுவதில்லை.

Also Read: பெண்கள் மனதை உருக வைத்த கமலின் 5 படங்கள்.. மொத்த தியேட்டரையும் கண்ணீரில் மிதக்க செய்த உலக நாயகன்

அட்ஜஸ்ட்மெண்ட் குறித்து பேசிய குட்டி பத்மினி

ஏனென்றால் அவர்களிடம் இதைப் பற்றி தைரியமா கேட்க முடியாது. நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூரிடம் அட்ஜஸ்ட்மெண்ட் பற்றி கேட்க யாருக்காவது தைரியம் இருக்குமா? இவர்களைப் போன்ற பெரிய பெரிய நடிகர் நடிகைகளின் வாரிசுக்கு அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை வராது.

ஆனால் ஹீரோயினாக வேண்டும் என வாய்ப்பு தேடி செல்பவர்களை தான், சிலர் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்கின்றனர். இதுதான் சினிமாவில் நடந்து கொண்டிருக்கிறது என கசப்பான உண்மையை குட்டி பத்மினி ஓபன் ஆக உடைத்து பேசி உள்ளார்.

Also Read: சந்தேகப்பட வைத்த ஸ்ரீதேவியின் மரணம்.. போனி கபூருக்கு நடந்த விசாரணையில் வெளியான உண்மை

Trending News