வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

கோல்டன் ஸ்பூன் குழந்தையின் சொத்து மதிப்பு.. ஸ்ரீதேவியை ஓரம் கட்டிய குட்டி புலி ஜான்வி கபூர்

Actress Jahnvi Kapoor Net Worth: தமிழ் சினிமாவை கலக்கிய நடிகை ஸ்ரீதேவி தமிழில் மட்டுமல்லாமல் பாலிவுட்டிலும் கொடிகட்டி பறந்தவர். இவருடைய மூத்த மகளான ஜான்வி கபூர் 2018ல் ஹீரோயினாக அறிமுகமானார்.

இவர் நடிக்கும் படங்களில் பெரும்பாலும் ஹீரோவுக்கு ஜோடியாக நடிப்பதை காட்டிலும், ஹீரோயின் சப்ஜெக்ட் படங்களை அதிகம் தேர்வு செய்து நடித்து வருகிறார். தன்னுடைய ஒவ்வொரு படத்திலும் ஸ்ரீதேவியை மிஞ்சும் அளவுக்கு தன்னுடைய நடிப்பை வெளிக்காட்டி வருகிறார்.

இவர் திரை உலகிற்கு அறிமுகமாகி வெறும் ஐந்து வருடத்திலேயே பல கோடி சொத்துக்கு அதிபதியாக உள்ளார். சிறுவயதிலிருந்தே கோல்டன் ஸ்பூன் குழந்தையாக வளர்ந்த ஜான்வி கபூர் பாலிவுட்டில் இப்போது முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

Also Read: ஜூனியர் மயிலுடன் கைகோர்க்கும் அதர்வா.. சுட சுட வெளியான அப்டேட்

ஜான்வி கபூரின் ஒட்டுமொத்த சொத்து விபரம்

இவர் தன்னுடைய தாய் மற்றும் தந்தை சம்பாத்தியம் இல்லாமல் தனக்கான தேவைகளை அவரே பூர்த்தி செய்து கொள்ளும் அளவுக்கு வளர்ந்து விட்டார். இவருடைய ஒட்டுமொத்த சொத்து மதிப்பு மட்டும் 68லிருந்து 78 கோடி இருக்கும். இவர் நடிக்கும் ஒரு படத்திற்கு மட்டும் 5 முதல் 8 கோடி சம்பளம் வாங்குகிறார். இன்ஸ்டாகிராமில் மட்டும் இவரை 22.8 மில்லியன் ஃபாலோவர்ஸ் பின் தொடர்கின்றனர்.

தன்னுடைய சமூக வலைதளத்தில் பிராண்டுகளை விளம்பரப்படுத்த மட்டும் ரூபாய் 80 லட்சம் வசூலிக்கிறார். இவர் 2019 ஆம் ஆண்டு பெனட்டன் வாசனை திரவத்தின் உலகளாவிய பிராண்ட் தூதராவர். இதைத்தவிர Nykaa, Mint Choc On மற்றும் Reliance Trends போன்றவற்றின் பிராண்ட் அம்பாசிடர் ஆகவும் இருக்கிறார்.

Also Read: அம்மாவை போல் வளர முடியாமல் தத்தளிக்கும் 5 வாரிசு நடிகைகள்.. ஸ்ரீதேவி இடத்தை பிடிக்க போராடும் ஜான்வி கபூர்

Trending News