புதன்கிழமை, ஜனவரி 8, 2025

மலையாள சூப்பர் ஸ்டாருடன் ஜோடி போடும் ஸ்ரீதிவ்யா.. 7 வருடம் கழித்து அடிச்சான் பாரு அப்பாயின்மென்ட் ஆர்டர்!

வருத்தபடாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் ஸ்ரீதிவ்யா. அதன் பிறகு சிவகார்த்திகேயனுடன் காக்கி சட்டை மற்றும் ரெமோ போன்ற படங்களில் நடித்தார்.

கடைசியாக இவருக்கு தமிழில் வெற்றியடைந்த திரைப்படம் தான் காஷ்மோரா. இந்த படத்திற்கு பிறகு ஸ்ரீதிவ்யா நடித்த சங்கிலி புங்கிலி கதவ தொற என்ற திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

அதனால் தற்போது ஸ்ரீதிவ்யாவுக்கு தமிழில் எந்த ஒரு பட வாய்ப்பும் வராமல் இருந்தது. இதனால் மன உளைச்சலில் இருந்த ஸ்ரீ திவ்யாவிற்கு லக் அடித்துள்ளது.

sri divya
sri divya

மலையாள திரையுலகில் பிரபல முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் பிரித்திவிராஜ். இவரது நடிப்பில் வெளியான ஐயப்பனும் கௌசியும் படம் மலையாள ரசிகர்களை தாண்டி தமிழ் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

தற்போது பிரித்விராஜ் நடிப்பில் உருவாக உள்ள ஜன கன மன என்ற படத்தின் மூலம் முதல் முறையாக மலையாள திரையுலகிற்கு அறிமுகமாக உள்ளார் ஸ்ரீதிவ்யா.

prithviraj
prithviraj

இந்த தகவலை கேட்ட சினிமா ரசிகர்கள் பல நாட்களாக பட வாய்ப்பு எதுவும் இல்லாமல் இருந்த ஸ்ரீதிவ்யாவுக்கு தற்போது லக் அடித்து உள்ளதாகவும். இந்தப் படத்தின் வெற்றியின் மூலம் அடுத்த அடுத்த மலையாள படங்களில் ஸ்ரீதிவ்யா நடிப்பார் எனவும் கூறிவருகின்றனர்.

Trending News