ஸ்லிம்மாக சிக்குனு இருக்கும் சிவகார்த்திகேயன் பட நடிகை.. டிரெண்டாகும் ஸ்ரீதிவ்யா வேற லெவல் புகைப்படம்.!

sri divya
sri divya

தமிழ் சினிமாவில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் அறிமுகமானவர் ஸ்ரீதிவ்யா. அதன் பிறகு ஜீவா, வெள்ளைக்கார துரை மற்றும் காக்கி சட்டை போன்ற படங்கள் வெற்றி அடைந்ததையடுத்து தமிழ் சினிமாவில் ரசிகர்களுக்கு தெரியக்கூடிய நாயகியாக வலம் வந்தார்.

அதன் பிறகு இவருக்கு பெங்களூர் நாட்கள், மருது, காஷ்மோரா போன்ற படங்கள் மாபெரும் வெற்றி பெற்றதையடுத்து. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளின் வரிசையில் இடம் பிடித்து தமிழ்ரசிகர்களை தன் பக்கம் வைத்துக் கொண்டார்.

கடைசியாக இவர் நடிப்பில் வெளியான சங்கிலி புங்கிலி கதவ தொற திரைப்படம் ஓரளவு வெற்றி பெற்று ரசிகர்களின் பாராட்டைப் பெற்றது. இவர் கதாநாயகியாக மட்டும் நடிக்காமல் ரெமோ , இஞ்சி இடுப்பழகி போன்ற படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

தற்போது இவர் நடிப்பில் ஒத்தைக்கு ஒத்த என்ற படம் மட்டுமே உள்ளது. திவ்யா அவரது சமூக வலைதளப் பக்கத்தில் சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

sri divya
sri divya

அதனைப் பார்த்த சில ரசிகர்கள் அட நம்ம ஸ்ரீதிவ்யாவா இப்படி ஒல்லியாக மாறியுள்ளார். ஆள் அடையாளம் தெரியாமல் போய் உள்ளார் என ஆச்சரியத்தில் உள்ளனர்.

sri divya
sri divya

ஒரு சில ரசிகர்கள் அவரது கமெண்ட் பாக்ஸில் சிவனாண்டி பெத்த மகளே இது எனவும் வர்ணித்து வருகின்றனர் அது மட்டுமில்லாமல் வாவ், செம பியூட்டி, அழகோ அழகு எனவும் கூறி வருகின்றனர்.

Advertisement Amazon Prime Banner