நடிகை ஸ்ரீபிரியா 70, 80 களில் முன்னணி நடிகையாக நடித்து வந்தவர். தற்போது குணச்சித்திர வேடங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார். கமலஹாசன், ரஜினிகாந்த், சிவாஜி கணேசன், ஜெய்சங்கர் என முன்னணி நட்சத்திரங்களுக்கு கதாநாயகியாக நடித்தவர். தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற பல மொழிகளில் நடித்துள்ளார். தமிழில் மட்டும் 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
தமிழ் மற்றும் தெலுங்கில் சில படங்களை இயக்கியுள்ளார். 1974 ஆம் ஆண்டு முருகன் காட்டிய வழி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான ஸ்ரீபிரியா. அதன்பிறகு கே பாலச்சந்தர் இயக்கிய அவள் ஒரு தொடர்கதை திரைப்படத்தில் நடித்தார்.
அப்படத்தில் அதிக புது முகங்கள் நடித்த திரைப்படம் என்றாலும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்கள் ரஜினி, கமல் உடன் இணைந்து நிறைய படங்கள் நடித்துள்ளார். இவரது திரைப்படங்களில் மயில் கல்லாக அமைந்த திரைப்படம் அவள் அப்படிதான்.
இந்த திரைப்படத்திற்கு தமிழ்நாடு அரசின் சிறந்த நடிகைக்கான விருது அவருக்கு வழங்கப்பட்டது. நடிகர் கமலஹாசன் ஆல் தொடங்கப்பட்ட மக்கள் நீதி மையம் கட்சியின் தலைமை பேச்சாளராக உள்ளார். இவருக்கு திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர்.
இயக்குனர் கே பாலச்சந்தர் இயக்கிய திரைப்படத்தில் ரஜினிகாந்துடன், ஸ்ரீபிரியாவும் நடித்த பொழுது ரஜினிகாந்த் அவர்கள் அதிகமாக மது அருந்தி மயக்கம் அடைந்து விட்டாராம். அப்பொழுது ஸ்ரீபிரியா அவரை மருத்துவமனையில் சேர்த்து அறிவுரை கூறினாராம். அதன் பிறகு ஒரு வாரம் வரை ஸ்ரீப்ரியா தான் பார்த்துக் கொண்டாராம்.
பில்லா, பைரவி, ஜானி, அவள் அப்படித்தான், இளமை ஊஞ்சலாடுகிறது, என் கேள்விக்கு என்ன பதில், அலாவுதீனும் அற்புத விளக்கும், அன்னை ஒரு ஆலயம், நட்சத்திரம், பொல்லாதவன், தீ ஆகிய படங்களில் ஸ்ரீபிரியா, ரஜினிகாந்துடன் இணைந்து நடித்துள்ளார். அன்று ஸ்ரீப்ரியா ரஜினிகாந்துக்கு உதவியதால் தற்போது ரஜினி சூப்பர் ஸ்டாராக உள்ளார்.