தமிழ் சினிமாவில் 80களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரீதேவி. இவர் நடிப்பில் வெளிவந்த 16 வயதினிலே படத்தில் இடம்பெற்ற செந்தூரப்பூவே பாடல் இன்றளவும் பிரபலம் ஆகும். அதனை தொடர்ந்து கமல், ரஜினி என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து இருந்தார். பின்னர் பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து கொண்டு செட்டிலானார்.
இவருக்கு ஜான்வி கபூர் மற்றும் குஷி கபூர் என இரண்டு மகள்கள் உள்ளனர். பாலிவுட் சினிமாவில் ஸ்ரீதேவி பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு துபாய் சென்றிருந்த அவர் திடீரென மாரடைப்பு காரணமாக இறந்ததாக செய்திகள் வெளியானது. இருப்பினும் தற்போது வரை இவரது இறப்பு மர்மமாகவே உள்ளது.
இந்நிலையில் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் தனது தாய் இறந்ததை அடுத்து தடாக் என்ற படம் மூலம் நாயகியாக பாலிவுட் சினிமாவில் அறிமுகமானார். இதனைத்தொடர்ந்து கோஷ்ட் ஸ்டோரீஸ், ரோஹி என தற்போது வரை ஐந்து ஹிந்தி படங்களில் நடித்துள்ளார்.
ஹீரோயின் அவதாரம் எடுத்தது தான் தாமதம். அன்றிலிருந்து இவர் பொது நிகழ்ச்சிகள் என எங்கு சென்றாலும் மிகவும் கவர்ச்சியான உடையில் மட்டுமே உலா வருவார். அது மட்டுமின்றி சமூக வலைதளங்களிலும் கவர்ச்சியான உடை அணிந்து விதவிதமாகப் புகைப்படங்கள் எடுத்து பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
அந்த வகையில் தற்போது படு மார்டனாக வெள்ளை நிற உடையில் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்களை ஜான்வி கபூர் பதிவிட்டுள்ளார். இணையத்தில் அந்த புகைப்படங்கள் தீயாய் பரவி வருகின்றன. இந்த படத்தை பார்த்த நெட்டிசன்கள் அவரை வர்ணித்து வருகின்றனர். தற்போது ஜான்வி தோஸ்தானா 2, குட்லக் ஜெர்ரி உட்பட 3 ஹிந்தி படங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.