செவ்வாய்க்கிழமை, ஜனவரி 14, 2025

இந்த வயதிலும் பாவாடை தாவணியில் ஹீரோயின் போல் ஜொலிக்கும் ஸ்ரீதேவி.. அழகே பேரழகே!

தமிழ் சினிமாவில் பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து பெயர் பெற்றவர் நடிகர் விஜயகுமார். இவர் உடன் நடித்த நடிகையான மஞ்சுளாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் திரைத்துறையை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களது குழந்தைகளும் சினிமாவில் களம் இறங்கினர்.

அந்த வகையில் நடிகர் அருண் விஜய் தற்போது தமிழ் படங்களில் நடித்து வருகிறார். முன்னணி கதாநாயகர்கள் வரிசையில் இடம் பிடித்துள்ளார். இவரை தொடர்ந்து வனிதா விஜயகுமார் நாம் அனைவரும் அறிந்த ஒருவர் தான். இவருக்கு அறிமுகமே தேவை இல்லை.

இவர்களுக்கு அடுத்தபடியாக பல படங்களில் நடித்தவர் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார். சத்யராஜ் நடிப்பில் வெளியான ரிக்ஷா மாமா படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் தான் நடிகை ஸ்ரீதேவி.

தொடர்ந்து, தேவதையை கண்டேன், தித்திக்குதே, பிரியமான தோழி, காதல் வைரஸ் ஆகிய படங்களில் நடித்து உச்சத்தில் இருந்த போது ராகுல் என்பவரை திருமணம் செய்து கொண்டு நடிப்புக்கு முழுக்கு போட்டார்.

sridevi
sridevi

இருப்பினும் அவ்வப்போது, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது குடும்பம் மற்றும் குழந்தைகளின் புகைப்படங்களை பகிர்ந்து வருவதை ஸ்ரீதேவி வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.

பாவாடை தாவணியில் தேவதை போல் ஜொலிக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதை கண்ட ரசிகர்கள் பலரும் இப்போது கூட ஹீரோயினாக நடிக்கலாம். அப்படியே இருக்கீங்க என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

Trending News