Srikanth: ஒரு காலத்தில் சாக்லேட் பாயாக பிசியான நடிகராக இருந்தார் ஸ்ரீகாந்த். ஆனால் அவருடைய சில படங்கள் தோல்வியை தழுவிய நிலையில் அவருக்கும் மார்க்கெட் குறைந்தது.
அதனால் இரண்டு ஹீரோ சப்ஜெக்ட்களில் நடிக்க ஆரம்பித்தார். அதுவும் கவனம் பெறாத நிலையில் தற்போது அவர் நடித்திருக்கும் படம் தான் தினசரி.
இப்படத்திற்கு இளையராஜா இசை அமைத்துள்ளார். சமீபத்தில் தேடி தேடி நான் கண்டேன் உன்னை என்ற பாடல் வெளியானது.
அதுதான் இப்போது பக்கா மீம்ஸ் கன்டென்ட் ஆக மாறி இருக்கிறது. அந்த பாடலை பார்த்த பலரும் இளையராஜா இன்னும் அதே துள்ளலோடு இருப்பதை பாராட்டி வருகின்றனர்.
ஆனால் அதைத் தாண்டி ஹீரோயினை பார்த்த பலருக்கும் அதிர்ச்சி தான். ஏனென்றால் அப்படத்தின் தயாரிப்பாளர் சிந்தியா தான் ஹீரோயின்.
பேசாமல் தயாரிப்பு வேலையோடு நிறுத்தி இருக்கலாம். எதற்கு இவருக்கு இந்த வேண்டாத வேலை என்பது அனைவருடைய மைண்ட் வாய்ஸ்.
ஏனென்றால் அவருக்கு டான்ஸ் சுட்டு போட்டாலும் வரவில்லை. கையை காலை அசைப்பதை கூட சிரமப்பட்டு தான் செய்கிறார்.
ஸ்ரீகாந்துக்கு வந்த சோதனை
அது கூட பரவாயில்லை ஆனால் இவரை எப்படி பார்த்தாலும் ஹீரோயினாக தெரியவில்லையே. விஜய் டிவி புகழுக்கு லேடி கெட்ட போட்டது போல் இருக்கிறது கிண்டலடித்து வருகின்றனர்.
இன்னும் சிலர் லெஜன்ட் அண்ணாச்சியின் பிமேல் வெர்ஷன் என நக்கல் அடிக்கின்றனர். அது மட்டும் இன்றி ராட்சசன் பட ஆன்ட்டி போல் இருக்கிறது என கமெண்ட்கள் குவிந்து வருகிறது.
ஆனால் சிலர் ஹீரோயின் தேவதை போல் இருக்கிறார் என புகழ்ந்து வருகின்றனர். அதையும் நெட்டிசன்கள் திட்டி தீர்க்கின்றனர்.
ஆப்பிள் பெண்ணே நீ யாரோ என பாடிய ஸ்ரீகாந்துக்கு இப்படி ஒரு சோதனையா. மார்க்கெட் குறைந்தால் இதுதான் கதியோ.