ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 29, 2024

நடிகர் ஸ்ரீகாந்துக்கு இவ்வளவு பெரிய மகளா? அம்மாவைப் போலவே செம அழகா இருக்காங்களே!

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் நல்ல நடிகராக வலம் வந்து தற்போது படவாய்ப்புகள் இல்லாமல் தடுமாறி வருபவர்தான் ஸ்ரீகாந்த்.

பல முன்னணி நடிகர்களின் பட வாய்ப்புகள் கூட இவருக்கு கிடைத்தது. அதுமட்டுமில்லாமல் அன்றைய கால இளம் பெண்களுக்கு மிகவும் ஃபேவரைட் நடிகராக வலம்வந்தார்.

அதன்பிறகு கதைகளை சரியாக தேர்வு செய்யாததால் தோல்விப் படங்களைக் கொடுத்து சினிமாவிலிருந்து ஒதுக்கப்பட்டார். பின்னர் தளபதி விஜய்யுடன் நண்பன் படத்தில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்தார். அந்த படத்தில் அவரது கதாபாத்திரம் மிகவும் பிரபலமானது.

அதன் பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென இண்டஸ்ட்ரி விட்டே காணாமல் போய்விட்டார்.

தற்போது வில்லன் நடிகராக சிம்பு மற்றும் ஹன்சிகா நடிப்பில் உருவாகியிருக்கும் மகா படத்தின் மூலம் ரீ என்ட்ரி ஆக உள்ளார். இவர் கடந்த 2007 ஆம் ஆண்டு வந்தனா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

ஸ்ரீகாந்த் மற்றும் வந்தனா தம்பதியினருக்கு ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தை உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சமீபத்தில் வந்தனா தன்னுடைய மகளுடன் ஒரு புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார்.

srikanth-vandhana-daughter
srikanth-vandhana-daughter

Trending News