வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

அத நெனச்சாலே வயிறே எரியுது.. முதலும் கடைசியுமாய் ஸ்ரீகாந்தால் தோல்வி, வெறுத்துப் போன தயாரிப்பாளர்

தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற படங்களில் நடித்து தென்னிந்திய நடிகராக ரவுண்டு கட்டிக் கொண்டிருந்த ஸ்ரீகாந்த் 2002 ஆம் ஆண்டு வெளியான ரோஜா கூட்டம் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார். இவர் அறிமுகமான முதல் படமே சூப்பர் ஹிட் அடித்ததால் அதன் பிறகு வரிசையாக அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைத்தது.

இருப்பினும் ஸ்ரீகாந்த் நடித்த ஒரே ஒரு படத்தை மட்டும் தயாரித்து படு தோல்வியை சந்தித்து அதன் பிறகு சினிமாவில் ப்ரொடக்சன் பண்ணுவதையே சுத்தமாகவே தவிர்த்து விட்டார் பிரபல மூத்த பத்திரிக்கையாளர் ஒருவர். நிறைய பேர் ஒரு படத்தோடு சினிமா ஆசையை மூட்டை கட்டி இருக்கிறார்கள்.

Also Read: சினேகாவுடன் கிசுகிசுக்கப்பட்ட 6 நடிகர்கள்.. ஒரே படத்தில் கேரக்டரை டேமேஜ் பண்ணிய தனுஷ்

அப்படி பிரபல பேச்சாளர் ஒருவர் ஸ்ரீகாந்தை நம்பி ஒரு படத்தை தயாரித்துள்ளார். எப்படியும் ஓடிவிடும் என்று எதிர்பார்த்து அவருக்கு அந்த படம் பெரிய நஷ்டத்தை விளைவித்துள்ளது. அதிலிருந்து அவர் சினிமா தயாரிப்பதையே விட்டு விலகிவிட்டார். வலைப்பேச்சு பிரபலமான மூன்று பத்திரிகையாளர்கள் சினிமாவைப் பற்றி பேசுவார்கள். புது புது அப்டேட்களை வெளிக்கொண்டு வருவார்கள்.

அதில் ஒருவர் தான் மூத்த பத்திரிகையாளர் அந்தணன். இவர் தயாரித்த ஒரே படம் கிழக்கு கடற்கரை சாலை. இந்த படம் அவருக்கு பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தி விட்டது. அதை நினைத்தால் இப்போதுமே வயிறு எரிகிறது என அந்தணன் ஆதங்கத்துடன் பேசுகிறார். 2006 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தை தயாரிக்கும் போது ஏகப்பட்ட பிரச்சனைகளை சந்தித்ததாக சமீபத்திய பேட்டி ஒன்றில் மனம் நொந்து போய் பகிர்ந்து இருக்கிறார்.

Also Read: சினேகாவுடன் கிசுகிசுக்கப்பட்ட 5 பிரபலங்கள்.. விளம்பரங்களை கொடுத்தே உஷார் செய்த லெஜெண்ட்

கடவுள் மட்டும் என் முன் தோன்றி என்னுடைய ஞாபகத்தில் இருந்து ஒரு வருடத்தை அழித்து விடலாம் என்ற வரம் கொடுத்தால், நிச்சயம் 2006ம் ஆண்டில் தான் நினைவில் இருந்து விடுவேன். அந்த அளவிற்கு அந்த வருடத்தை நான் திரும்ப நினைத்தாலே எனக்கு நரக வேதனையாக இருக்கிறது.

என்னுடைய சம்பார்த்தனை எல்லாம் கிழக்கு கடற்கரை படத்தில் போட்டு விட்டேன். ஆனால் அது கடலில் எறிந்துவிட்ட பணப்பெட்டி போல தான். இந்த படத்திற்குப் பிறகு படத்தை தயாரிக்கும் ஆசை சுத்தமாகவே விட்டுப் போச்சு என்று முதலும் கடைசிமாய் ஸ்ரீகாந்தின் கிழக்கு கடற்கரை படத்தை இயக்கிய வலைப்பேச்சு அந்தணன் மனம் திறந்து பேசி இருக்கிறார்.

Also Read: ஸ்ரீகாந்துக்கு இவ்வளவு பெரிய மகளா?. ஆச்சரியமூட்டும் ஃபேமிலி போட்டோ

Trending News