இலங்கை கிரிக்கெட் வாரியம் தற்போது பணப்பிரச்சனையில் பெரிதும் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. இலங்கை அணியில் உள்ள சீனியர் வீரர்கள் பலர் சம்பளப் பிரச்சினை காரணமாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தற்போது இலங்கை கிரிக்கெட் அணி இளம் வீரர்களை கொண்டு செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் 12 வருடமாக இலங்கை அணிக்காக விளையாடிய வீரர் திடீரென தனது ஓய்வு முடிவை அறிவித்து அதிர்ச்சி அளித்தார். இலங்கை அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் இசுரு உதானா. இலங்கை அணிக்காக உதானா 21 ஒருநாள் போட்டிகல், 35 டி20 போட்டிகளில் விளையாடி 45 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியுள்ளார்.
இசுரு உதானா தனது ஓய்வு தொடர்பான கடிதத்தை இலங்கை கிரிக்கெட் வாரியத்துக்கு அனுப்பியுள்ளார். இவர் திடீரென்று இந்த முடிவை எடுத்தது இலங்கை அணிக்கும், அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்திற்கும் பேரதிர்ச்சியாக இருந்துள்ளது.
இவரது இந்த திடீர் முடிவு கிரிக்கெட் வாரியத்தின் மீதுள்ள வெறுப்பு காரணமாக அல்லது வேறு ஏதும் காரணமா என ரசிகர்கள் குழம்பி வருகின்றனர்.