வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

சமந்தாவின் குத்தாட்டத்துக்கு ஈடு கொடுத்தாரா ஸ்ரீலீலா.. புஷ்பா 2க்கு வாங்கிய சம்பளம்

Samantha : அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற புஷ்பா படத்தில் ஓ சொல்றியா மாமா என்ற பாடலுக்கு சமந்தா நடனமாடி இருந்தார். ஓவர் நைட்டில் இந்த பாடல் உலகம் முழுவதும் ட்ரெண்டானது. அதிலும் குறிப்பாக சமந்தாவின் குத்தாட்டம் பலரையும் கவர்ந்தது.

இந்த சூழலில் புஷ்பா 2 படத்தின் இளம் நடிகையான ஸ்ரீலீலா நடனமாடி இருக்கிறார். தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் கோட் படத்தில் இடம்பெற்ற மட்ட பாடலில் ஆடுவதற்கு படக்குழு அணுகி இருந்தது. ஆனால் அப்போது ஸ்ரீலீலா மறுப்பு தெரிவித்து விட்டார்.

அதாவது தமிழில் அவர் அறிமுகம் ஆனதால் ஒரு படத்திற்கு கூத்தாட்டம் போட்டால் மார்க்கெட் குறைந்துவிடும் என்ற பயத்தில் விஜய் பட வாய்ப்பை மறுத்துவிட்டார். ஆனால் இப்போது புஷ்பா 2 படத்தில் தாராள கவர்ச்சி காட்டி நடனம் ஆடி இருக்கிறார்.

புஷ்பா 2 படத்தில் ஒரு பாடலுக்கு ஸ்ரீலீலா நடனமாட வாங்கிய சம்பளம்

அதற்காக அவர் எவ்வளவு சம்பளம் வாங்கியுள்ளார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது புஷ்பா படத்தின் ஒரே ஒரு பாடலுக்கு நடனம் ஆடியோ சமந்தா அந்த படத்தின் கதாநாயகி ராஷ்மிகா மந்தனாவை விட அதிக சம்பளம் பெற்று இருந்தார்.

இந்த பாடலுக்கு மட்டும் கிட்டத்தட்ட ஐந்து கோடி ரூபாய் சம்பளம் சமந்தாவுக்கு கொடுக்கப்பட்டிருந்தது. ஏனென்றால் அப்போது சமந்தாவுக்கு இருந்த மவுசு மற்றும் மார்க்கெட் காரணமாக இவ்வளவு பெரிய தொகையை தயாரிப்பு நிறுவனம் கொடுத்திருந்தது.

ஆனால் இப்போது புஷ்பா 2 படத்தின் ஸ்ரீலீலா நடனமாடி உள்ள நிலையில் அவருக்கு இரண்டு கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டிருக்கிறதாம். சமந்தாவை காட்டிலும் இது குறைந்த தொகையாக இருந்தாலும் சினிமாவில் வந்த குறுகிய காலத்திலேயே அவருக்கு இவ்வளவு சம்பளம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

Trending News