திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

மரணப்படுக்கையில் ஸ்ரீவித்யாவின் கடைசி ஆசை.. கமலை கண்ணீர் விட வைத்த சம்பவம்

திறமையான நடிகை என்று பெயர் எடுத்த ஸ்ரீவித்யா நம் தமிழ் திரையுலகிற்கு கிடைத்த பொக்கிஷம் என்று தான் சொல்ல வேண்டும். அனைத்து டாப் ஹீரோக்களுடனும் இணைந்து நடித்திருக்கும் இவர் கடந்த 2006 ஆம் ஆண்டு புற்றுநோய் காரணமாக மரணமடைந்தார்.

இது பெரும் இழப்பாக பார்க்கப்படும் நிலையில் அவருடைய கடைசி காலம் பற்றியும் அவர் கட்ட கஷ்டங்கள் பற்றியும் பல செய்திகள் வெளி வந்திருக்கிறது. ஆனால் மரணப்படுக்கையில் ஸ்ரீவித்யாவின் கடைசி ஆசை என்ன என்பது பற்றி பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

Also read: சாமியார் வேஷத்திற்கு கச்சிதமாக பொருந்திய 6 நடிகர்கள்.. பரமசிவனாய் பட்டைய கிளப்பிய சூப்பர் ஸ்டார், கமல்

அந்த வகையில் அவர் தன் இறுதி நிமிடங்களை எண்ணிக் கொண்டிருந்த வேளையில் கடைசியாக ஒரே ஒரு நபரை மட்டுமே பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கிறார். தன்னுடைய நோய் பாதிப்பின் காரணமாக உடல் நிலையில் பல மாற்றங்களை சந்தித்த ஸ்ரீவித்யா தன் நெருங்கிய உறவுகளை தவிர வேறு யாரையும் அப்போது சந்திக்க விரும்பாமல் இருந்தார்.

அப்படி இருந்த நிலையில் அவர் நடிகர் கமலை மட்டும் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கிறார். அதன்படி இந்த தகவல் கமலுக்கும் சென்றிருக்கிறது. உடனே பதறிப் போய் கேரளாவுக்கு சென்றவர் ஸ்ரீவித்யாவின் நிலையை பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்திருக்கிறார். ஏனென்றால் அழகு தேவதையாக இருந்தவர் உருக்குலைந்து போய் படுக்கையில் இருந்திருக்கிறார்.

Also read: கமலுக்கும் 4, சுருதிஹாசனுக்கும் 4.. போட்டி போட்டு லிவிங் டு காதல் செய்யும் அப்பாவும், பொண்ணும்

இதை கொஞ்சம் கூட எதிர்பாக்காத கமல் கண்களில் கண்ணீர் வழிய அப்படியே நின்று விட்டாராம். அந்த சமயத்தில் இருவரும் ஒரு வார்த்தை கூட பேசிக் கொள்ளவில்லையாம். அதன் பிறகு சிறிது நேரத்திலேயே ஸ்ரீவித்யாவின் உயிரும் பிரிந்து இருக்கிறது. அந்த வகையில் கமலை பாதித்த மரணங்களில் இதுவும் ஒன்று. இதை அவரே ஒரு பேட்டியில் மனம் திறந்து கூறியிருக்கிறார்.

அதாவது என்னுடைய அம்மா, அண்ணியின் இழப்பிற்கு பிறகு ஸ்ரீவித்யாவின் மரணம் தான் என்னை மிகவும் பாதித்தது என்று குறிப்பிட்டிருந்தார். அந்த வகையில் வாழ்க்கையில் பல ஏமாற்றங்களையும், துரோகங்களையும் சந்தித்த ஸ்ரீவித்யா கமல் மீது கொண்டிருந்த காதல் பலருக்கும் தெரியும். அதன் காரணமாகவே தன் இறுதி கட்டத்தில் அவரை பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டு இருக்கிறார். இது பலரின் மனதையும் கனக்க வைக்கும் ஒரு சம்பவமாகவே இருக்கிறது.

Also read: ஆபரேஷன் செய்து இரும்பு பிளேட்டோடு சுற்றும் 5 ஹீரோக்கள்.. உலோக நாயகனாக மாறிய உலக நாயகன்

Trending News