வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

அப்பா அடையாளத்தை வெறுக்கிறேன்.. பல் மருத்துவர்தான் அப்பா.. பகீர் கிளப்பிய ஸ்ருதிஹாசன்

புலிக்கு பிறந்தது பூனையாகுமா என்பது போல தமிழ், தெலுங்கு, பாலிவுட் சினிமாக்களில் தனது நடிப்பு திறமையால் முன்னணி ஹீரோயினாக வலம் வருபவர் நடிகை ஸ்ருதிஹாசன். நடிகையாக மட்டுமல்லாமல் பாடகி, இசையமப்பாளர் என பன்முக திறமையுடன் வலம் வருபவராகவும் இருக்கிறார்.

இவர் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில், இவர் கூறியது ரசிகர்கள் பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏன் என்றால் தன் அப்பா பெயரை கம்பீரமாக சொல்லவேண்டும் என்று தான் எல்லாரும் நினைப்பார்கள். ஆனால் இவர், தன் அப்பா பெயரை ஒரு அடையாளமாக இருப்பதை நினைத்தாலே கோவம் வருகிறது என்று கூறியிருக்கிறார்.

பல் டாக்டர் தான் அப்பா…

ஸ்ருதிஹாசன் தன் அப்பா பற்றி கூறும்போது, ” பலரும் கமலின் மகள் என்று குறிப்பிடுவார்கள். இது ஒரு வித்தியாசமான அடையாளத்தை வழிவகுத்தது. நான் ஸ்ருதி, எனக்கு என் சொந்த அடையாளம் வேண்டும் என்று நினைப்பேன். யாராவது கேட்டால், ‘இல்லை, என் அப்பா டாக்டர் ராமச்சந்திரன், அது எங்கள் பல் மருத்துவரின் பெயர். ‘நான் பூஜா ராமச்சந்திரன்’ என்று நான் என பெயரை உருவாக்கினேன்.”

“எனது தந்தையின் புகழ் வெளிச்சத்திலிருந்து தப்பிப்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றதாக இருந்தது. இதன் காரணமாக சென்னையில் இருப்பதே எனக்கு பிடிக்கவில்லை. இங்குள்ளவர்களை பார்த்து வெறுப்பாக உணர்ந்தேன். இருப்பினும் மரபு ரீதியிலான பெருமையை ஒப்புக்கொள்கிறேன். “கமல் இல்லாமல் ஸ்ருதியை நான் கற்பனை கூட செய்ய விரும்பவில்லை.” என்று கூறியுள்ளார்.

இதை தொடர்ந்து ரசிகர்கள், “என்ன இது.. அப்பா புகழ் வேண்டாம் என்று சொல்வதெல்லாம் ஓகே.. அதுக்காக பல் டாக்டருக்கு அப்பா அடையாளத்தை கொடுப்பதா..” என்றும் விமர்சித்து வருகின்றனர்.

Trending News