புதன்கிழமை, ஜனவரி 15, 2025

முத்துவுக்கு சப்போர்ட்டாக பேசி அம்மாவை எதிர்க்க போகும் சுருதி.. ரோகிணிக்கு பணம் கொடுத்து உதவிய ரவி மாமியார்

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், ஸ்ருதி ஹோட்டலில் இருந்து பிரியாணி வாங்கிட்டு வந்து சாப்பிடும் போது விஜயாவிற்கும் கொடுத்து விடுகிறார். விஜயாவும் பிரியாணி என்றதும் மூக்கு முட்ட சாப்பிட்டு மூச்சு விடவே கஷ்டப்பட்டு இருக்கிறார்.

அப்பொழுது ஒவ்வொருவரும் கை வைத்தியம் பண்ணி வந்த நிலையில் குணமாகாத விஜயாவிற்கு முத்து கொடுத்த ஷாக்கிங் ட்ரீட்மெண்ட் உடனே சரி செய்து விட்டது. இதனைத் தொடர்ந்து சுருதிக்கு நடக்கப் போகும் தாலி பெருக்கு பங்க்ஷனில் முத்து கலந்துக்க வேண்டாம் என்று ஸ்ருதி அம்மா வந்து விஜயாவிடம் சொல்கிறார்.

முத்துவை நிராகரிக்கும் விஜயா

உடனே விஜயாவும், முத்து வரமாட்டான் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று ஸ்ருதி அம்மாவுக்கு வாக்கு கொடுக்கிறார். அடுத்ததாக விஜயா, அண்ணாமலையிடம் தாலி பெருக்கு பங்க்ஷனுக்கு முத்து வர வேண்டாம். அவன் வந்தால் ஏதாவது தேவையில்லாமல் பேசி பிரச்சினையே பெரிதாக்கி விடுவான்.

இதனால் அங்கு வந்த பெரிய பெரிய ஆட்கள் முன் அவமானமாக போய்விடும் என்று ஸ்ருதி அம்மா நினைக்கிறார். அதனால் அவர் சொல்வதும் சரிதான் நீங்கள் தான் முத்துவை வர வேண்டாம் என்று தடுக்க வேண்டும் என சொல்கிறார். இதை கேட்டு அண்ணாமலை, முத்து வரமாட்டான் என்று சொல்லிவிடுகிறார்.

உடனே விஜயா சந்தோஷப்பட்டுக் கொள்கிறார். அப்பொழுது அண்ணாமலை வெயிட் பண்ணு முத்து வரவில்லை என்றால் நானும் அந்த பங்ஷனுக்கு வர மாட்டேன் என்று சொல்கிறார். இதை கேட்டுக் கொண்டிருந்த மீனாவும் நீங்கள் ரெண்டு பேரும் போகாத பங்ஷனுக்கு நானும் போக மாட்டேன் என்று சொல்கிறார்.

அதற்கு ரவி, என் கல்யாணத்துக்கு தான் நீங்கள் வர முடியவில்லை அட்லீஸ்ட் இதைக்காவது நீங்கள் அனைவரும் இருக்க வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன் என சொல்கிறார். உடனே சுருதியும் நீங்கள் அனைவருமே கலந்து கொள்ள வேண்டும் என்று கூறுகிறார்.

அதன் பின் அண்ணாமலை, முத்து வந்தால் மட்டும் தான் நான் வருவேன் என்று சொன்னதும் மீனா, முத்துவை சமாதானப்படுத்தி வருவதற்கு சம்மதம் தெரிவிக்கிறார். விஜயாவுக்கு வேற வழியில்லை, அதனால் சுருதி அம்மாவுக்கு போன் பண்ணி முத்து வருவான் என்று சொல்லுகிறார்.

இதை கேட்ட சுருதி அம்மா அப்படி என்றால் முத்து வந்தால் அவனை வைத்து ஒரு பிரச்சினையை ஆரம்பித்து அதன் மூலம் சுருதி மற்றும் ரவியை நம்முடன் கூட்டிட்டு வரலாம் என்று பிளான் பண்ணி விட்டார். அது மாதிரி அங்கே ஒரு பிரச்சினை நடக்க போகும். ஆனால் ஸ்ருதி அனைவரது முன்னாடியும் முத்துவுக்கு சப்போர்ட்டாக பேசி அம்மாவையே அசிங்கப்படுத்த போகிறார்.

இதனை அடுத்து ரோகிணிக்கும் தாலி பெருக்கு பங்க்ஷன் சேர்த்து வைப்பதால் தாலி வாங்குவதற்கு பணம் வேண்டும் என்பதால் ரோகிணி அம்மா பார்லருக்கு வந்து பணம் கொடுத்து உதவி பண்ணுகிறார். அந்த நேரத்தில் விஜயாவும் பார்லருக்கு வருகிறார்.

அப்பொழுது ரோகினி, விஜயா கண்ணில் அம்மாவை சிக்க வைக்க கூடாது என்பதற்காக பிளான் பண்ணி வெளியே அனுப்பி விட்டார். ஆக மொத்தத்தில் இப்போதைக்கு ரோகிணி யாரிடமும் சிக்க வாய்ப்பு இல்லை. தொடர்ந்து ஒவ்வொரு விஷயத்திலும் ஏதாவது பிளான் பண்ணி சமாளித்து விடுகிறார்.

Trending News