வியாழக்கிழமை, ஜனவரி 2, 2025

முத்து மீனாவைப் பிரிக்க மாமியாருடன் சேர்ந்து திட்டம் போடும் சுருதி.. பலிகடாக மாட்ட போகும் வெத்துவேட்டு

Siragadikkum Asai: விஜய் டிவி சீரியலை பொருத்தவரை தற்போது நம்பர் ஒன் டிஆர்பி யில் இருப்பது சிறகடிக்கும் ஆசை. அதற்கு காரணம் நடுத்தர குடும்பத்தில் நடக்கும் சண்டே சச்சரவுகள் மற்றும் முத்து மீனாவுக்கு இடையில் நடக்கும் ரொமான்டிக்கான சண்டை. இதற்கிடையில் ஸ்ருதி ரவியை மேரேஜ் பண்ணியதால் விஜயா கண்ணில் விரலை விட்டு ஆட்டும் மருமகளாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அந்த வகையில் எப்படியோ ஸ்ருதி ரவியை வீட்டுக்கு கூட்டிட்டு வந்து விட்டார் மீனா. வந்த பிறகு மீனாவுக்கு சப்போர்ட்டாக ஸ்ருதி இருப்பார் என்று எதிர்பார்த்தால் முத்து கேரக்டர் சரி இல்லை என்று தவறாக புரிந்து கொண்டு எப்படியாவது மீனாவை பிரித்து விட வேண்டும் என்று பிளான் பண்ணுகிறார். ஏற்கனவே விஜயாவுக்கு மீனாவை பார்த்தாலே பிடிக்காது.

இப்போ ஸ்ருதிக்கும் பிடிக்கவில்லை என்று தெரிந்தால் ரெண்டு பேரும் சேர்ந்து மீனாவின் வாழ்க்கையில் பிரச்சனையை உண்டாக்க வாய்ப்பு இருக்கிறது. அதற்கேற்ற மாதிரி முத்துவும் எப்பொழுது பார்த்தாலும் ரவி ஸ்ருதியை திட்டிக்கொண்டு அவமானப்படுத்தி வருகிறார். இதனால் இன்னும் பிரச்சனை அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது.

Also read: 2 நாள் கதறுவாங்க அப்புறம் மறந்துடுவாங்க.. 100% கார்ப்பரேட் புத்தியை காட்டும் விஜய் டிவி

இவர்களுக்கு இடையில் பாவம் மீனாதான் மாட்டிக்கொண்டு முழிக்கிறார். மாமியார் வீட்டில் வேலைக்காரி மாதிரி அடிமையாக எல்லா வேலைகளையும் பார்த்து திட்டும் வாங்கிக் கொண்டு அனைத்தையும் பொறுத்துக் கொள்கிறார். அந்த வகையில் பொண்டாட்டிக்கு சப்போர்ட்டாக முத்து செய்யும் ஒவ்வொரு வேலையும் வீட்டில் இருப்பவர்களை கோபப்படுத்தி வருகிறது.

இதுல எல்லா தில்லாலங்கடி வேலையும் பார்த்துட்டு பொய் பிராடு பண்ணிக்கிட்டு மாமியாரையும், குடும்பத்தில் இருப்பவர்களையும் ஏமாத்தி பொய் சொல்லிக்கொண்டு வெத்துவேட்டாக ரோகிணி இருக்கிறார். இவர் செய்த எல்லா வேலையும் குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தெரிய வந்தால் அப்பொழுது தான் இவருடைய உண்மையான முகத்திரை கிழியும்.

முக்கியமாக ரோகிணியை தலையில் வைத்து தூக்கி ஆடும் மாமியாருக்கு இது மரண அடியாக இருக்கப் போகிறது. இந்த ஒரு விஷயத்தை அடுத்த கட்ட கதையாக நகர்ந்து வந்தால் இன்னும் கதை சூடு பிடித்து பார்ப்பவர்களை விறுவிறுப்பாக கொண்டு போகும்.

Also read: நாட்டாமை தீர்ப்பு அவருக்கே ஆப்பு.. கமலை ஓரங்கட்டி பிக்பாஸை நடத்த 5 பிரபலங்களுக்கு வலை வீசும் விஜய் டிவி

Trending News