புதன்கிழமை, ஜனவரி 15, 2025

முத்துக்கு குடைச்சல் கொடுக்க பிளான் பண்ணிய சுருதி குடும்பம்.. மீனாவை அசிங்கப்படுத்தி பேசிய விஜயா

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், முத்துவுக்கு நாளா பக்கமும் இருந்து பிரச்சனைகளும் தொந்தரவுகளும் வந்து கொண்டே இருக்கிறது. அதன்படி சுருதி குடும்பத்தால் தற்போது வேறு ஒரு பிரச்சனையில் முத்து மாட்டிக் கொண்டார். அதாவது மனோஜ் ஓபன் பண்ண ஷோரூம் இல் சுருதி அம்மா கெத்து காட்டுவதற்காக அதிகமான விலை கொடுத்து AC வாங்கி இருந்தார்.

ஆனால் அந்த ஏசியில் தான் முத்துவுக்கு மிகப்பெரிய ஆப்பு இருக்கிறது என்பது இப்போதுதான் தெரிகிறது. அதாவது ஸ்ருதி அம்மா வாங்கின ஏசியை முத்து வீட்டில் ஹாலில் வைப்பதற்காக அனுப்பி வைத்திருக்கிறார். இதை வெளியே கார் துடைத்துக் கொண்டிருந்த முத்துக்கு தான் தெரிய வருகிறது. உடனே முத்து அந்த ஏசியை திருப்பி அனுப்பி விட்டார்.

முத்துவை பற்றி கொளுத்தி போட்ட சுருதி அம்மா

அத்துடன் ஸ்ருதி அம்மாவுக்கு போன் பண்ணி உங்க பணக்கார திமிரை எங்கள் வீட்டில் காட்ட வேண்டாம். எங்க அப்பாவுக்கு மூன்று மகன்கள் இருக்கிறோம். அவருக்கு என்ன வேணும் ஏது வேண்டும் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். நீங்கள் உங்கள் வீட்டு வேலையை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தால் போதும் என்று கரராக பேசி விட்டார்.

இதனால் கடுப்பான சுருதி அம்மா இதை சும்மா விடக்கூடாது வீட்டில் போய் நான் கேட்டுட்டு வருகிறேன் என்று கிளம்புகிறார். அதற்கு ஸ்ருதி அப்பா அதெல்லாம் வேண்டாம் நான் சொல்ற மாதிரி பண்ணு கண்டிப்பாக முத்துவால் வீட்டுக்குள் பிரச்சனை வரும் என்று ஐடியா கொடுக்கிறார். அதாவது நீ வாங்கின AC மனோஜ் கடையில் போய் ரிட்டர்ன் கொடுத்திரு.

அப்படி கொடுக்கும்பொழுது வியாபாரம் அடிபட்டுவிட்டது என்ற கடுப்பில் முத்து மீது கோபப்படுவார்கள். அதை கோபத்துடன் வீட்டில் போய் சண்டை நடக்கவும் வாய்ப்பு இருக்கிறது என்று சொல்கிறார். உடனே ஸ்ருதி அம்மா இது நல்ல ஐடியாவாக இருக்கிறது என்று நேரடியாக மனோஜ் கடைக்கு போயிட்டு எங்களுக்கு ஏசி வேண்டாம் என்று சொல்கிறார்.

ரோகினி ஏன் என்னாச்சு என்று கேட்கும் பொழுது, இந்த ஏசி நான் வாங்கினது உங்க வீட்டுக்கு கிப்ட் ஆக தான். அதனால் நான் அனுப்பி வைத்த கிப்டை முத்து வேண்டாம் என்று திருப்பி அனுப்பி வைத்துவிட்டார். பிறகு இந்த பொருளை வாங்கி நான் என்ன பண்ணுவது. அதனால்தான் திருப்பிக் கொடுக்கிறேன் என்று சொல்கிறார். அதற்கு மனோஜ் நான் டீலர்க்கு கொடுக்க வேண்டிய கமிஷன கொடுத்து விட்டேன்.

இப்பொழுது எங்களிடம் பணம் இல்லை என்று சொல்கிறார். அதற்கு சுருதி அம்மா நான் மட்டும்தான் உங்களுக்கு பெரிய பொருளை வாங்கி பணத்தை கொடுத்தனா. வேற ஏதும் கஸ்டமர் வரவில்லையா என்று கேட்டதும் பக்கத்தில் பொருள்களை பார்த்துக் கொண்டிருந்த கஸ்டமர்ஸ் இங்கு என்ன பொருள் சரியா இல்லையா? பொருட்களை எல்லாம் ரிட்டன் கொடுக்கிறார்கள் என்று சொல்லி திரும்பி போய் விட்டார்கள்.

அதே நேரத்தில் சுருதி அம்மா, ரோகினி மற்றும் மனோஜிடம் முத்துவை பற்றி தாறுமாறாக பேசி ஏத்தி விடுகிறார். இதை கடுப்பில் வீட்டுக்கு போன மனோஜ், முத்துவிடம் சண்டை போடுகிறார். அத்துடன் இதுதான் சான்ஸ் என்று முத்து மீது அனைவரும் குற்றச்சாட்டு வைத்து தவறாக பேசுகிறார்கள். இதற்கிடையில் விஜயா, மீனாவிடம் ரோகிணி மற்றும் மனோஜ்க்கு வித்தியாசமான சாப்பாடுகளை சமைக்க சொல்லி தொந்தரவு கொடுக்கிறார்.

ஆனால் மீனா என்னால முடியாது அவர்களுக்கு தேவை என்றால் அவர்களை சமைச்சு கொள்ளட்டும் என்று சொல்கிறார். உடனே விஜயா உனக்கு தூங்குவதற்கு ரூம் கொடுக்கவில்லை என்ற கோபத்தில் தான் இந்த அளவிற்கு வக்கிரமாக நடந்து கொள்கிறாயா.? அப்படி என்ன உனக்கு தனியாக ரூம் கேட்குது.

அந்த அளவுக்கு உங்க வீட்ல சொகுசு தான் வளர்ந்து வந்தியா என்று வாய்க்க வந்தபடி மீனாவை அசிங்கமாக பேசி கண்ணீர் சிந்த வைத்து விட்டார். இதற்கெல்லாம் ஒரே வழி கூடிய சீக்கிரத்தில் ரோகினி பற்றிய முகமூடியை கிழித்து விஜயாவிற்கு தெரிய வந்தால் நன்றாக இருக்கும்.

சிறகடிக்கும் சீரியலில் ஆவலுடன் எதிர்பார்க்கும் கதைகள்

Trending News