Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், நல்லதுக்கு காலமே இல்லை என்று சொல்வதற்கு ஏற்ப முத்துக்கு தொடர்ந்து ஏகப்பட்ட பிரச்சினைகள் வந்து கொண்டு இருக்கிறது. அதுவும் சுற்றி இருப்பவர்கள் பொய்ப் பித்தலாட்டம் பண்ணி முத்துவை மாட்டி விடுகிறார்கள்.
அதற்கேற்ற மாதிரி முத்துவும் வாய் தொடுப்பான பேச்சால் வீண்வம்பை விலை கொடுத்து வாங்குகிறார். அதாவது ஸ்ருதி அம்மா பணக்கார கெத்தை காட்டுவதற்கு ஏசி வாங்கி முத்து வீட்டுக்கு அனுப்பி வைத்திருக்கிறார். இதை பார்த்த முத்து திருப்பி அனுப்பி ஸ்ருதி அம்மாவை அவமானப்படுத்தி விட்டார்.
குடும்பத்தில் கும்மி அடித்த சுருதி அம்மா
இதனால் கோபமான ஸ்ருதி அம்மா குடும்பத்திற்குள் பிரச்சனை ஏற்படுத்த வேண்டும் என்று ரோகினி மற்றும் மனோஜிடம் கொளுத்தி போட்டு விட்டார். சும்மாவே முத்து பற்றி ஏதாவது ஒரு விஷயம் கிடைத்தால் ரோகிணி நல்ல வச்சு செய்வாரு. இப்போ இந்த மாதிரி ஒரு விஷயம் கிடைத்திருக்கிறது சும்மாவா விடுவாரு.
அதாவது ஏசியை ஸ்ருதி அம்மா மனோஜ் கடையில் வந்து திருப்பி கொடுத்துவிடுகிறார். அதற்கு பணத்தை கொடுக்க முடியாததால் ரோகிணி அவருடைய தாலிச்செயினை அடகு வைத்து பணத்தை கொடுத்து விடுகிறார். இதை குடும்பத்தில் இருப்பவரிடம் வந்து சொன்னதும் அனைவரும் முத்து பெரிய தப்பு பண்ணியது போல் அவரிடம் சண்டை போட்டார்கள்.
போதாதற்கு அண்ணாமலையும் நீ எது பண்ணினாலும் என்னிடம் கேட்டிருக்கணும். நீ எப்படி தனியாக ஒரு முடிவை எடுக்க முடியும் என்று அவரும் முத்துவை திட்டி விட்டார். அத்துடன் விஜயா, ரோகினி கழுத்தில் மஞ்சள் கயிறு பார்த்ததும் சம்மந்தி பார்த்தால் என்ன ஆகும் என்று மீனா முத்துவை திட்டி அவமானப்படுத்தி விடுகிறார்.
ஆக மொத்தத்தில் ஸ்ருதி அம்மா போட்ட பிளானில் அனைவரும் சிக்கி முத்துவை வெறுக்கும் படியாக அமைந்துவிட்டது. இதனைத் தொடர்ந்து மீனாவிற்கு உடம்பு சரியில்லாததால் ரோகிணி ரூமில் ரெஸ்ட் எடுக்க போகிறார். இதனை பார்த்த விஜயா பிரச்சனை பண்ணி முத்து மற்றும் மீனாவை வழக்கம் போல் அவமானப்படுத்தி விடுகிறார்.
இதற்கு மொத்தமாக சேர்த்து வைத்து முத்து திருப்பி பதிலடி கொடுக்கப் போகிறார். அதற்கேற்ற மாதிரி மீனாவும் கொஞ்சம் அடங்கிப் போய் இருந்தால் மிச்ச இருக்க மானம் மரியாதை கிடைக்கும்.
சிறகடிக்கும் சீரியலில் முந்தைய சம்பவங்கள்
- முத்துக்கு குடைச்சல் கொடுக்க பிளான் பண்ணிய சுருதி குடும்பம்
- மனோஜை நம்பி ஓவராக ஆட்டம் போடும் விஜயா
- முத்து எடுத்த அதிரடி முடிவு, வேலைக்காரியாக மாறும் ரோகினி