தில்ராஜ் மற்றும் ஷங்கரின் பிரம்மாண்ட கூட்டணியில் பொங்கலுக்கு வெளிவர இருக்கிறது ராம்சரனின் கேம் சேஞ்சர் படம். எப்படியும் இந்த படத்தை பிளாக்பஸ்டர் ஹிட்டாக்க வேண்டுமென சங்கருடன் இணைந்து மொத்த ராம்சரண் குடும்பமும் புரமோஷனில் குதித்துள்ளது.
பவன் கல்யாண், சிரஞ்சீவி, அல்லு அர்ஜுன் என ராம்சரனுக்காக தோள் கொடுத்து வருகிறது அவரது சொந்த உறவுகள். சுமார் 210 பேர் அமெரிக்க சென்று இந்த படத்தை ப்ரோமோஷன் செய்து திரும்பியுள்ளனர். அதுவும் போக ஒவ்வொரு ஸ்டேட்டிலும் பெரிய பெரிய வி ஐ பி களை கூப்பிட்டு ப்ரோமோஷனில் அசத்துகிறார்கள்.
இப்பொழுது அவர்களது குறி சென்னை மீது திரும்பி உள்ளது. இங்கே ரஜினி, விஜய், கமல், அஜித் என அனைவரையும் இந்த பட ப்ரமோஷனுக்காக அழைக்க உள்ளார் சங்கர். சென்னையிலும் ஒரு பிரம்மாண்ட நிகழ்ச்சி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே இந்தியன் 2 படத்தால் சங்கர் பெயர் பெரிதும் டேமேஜ் ஆனது. சங்கர் படமா என ண்ணை மூடி வாங்கியவர்கள் எல்லோரும் அதன் பின் படத்தை பார்த்து பேரம் பேசி வியாபாரம் செய்கிறார்கள். இப்பொழுது கேம் சேஞ்சர் படத்திற்கும் கிட்டத்தட்ட அதே நிலைதான்.
கேம்சேஞ்சர் பட பிரமோஷனுக்கு தெலுங்கு சினிமாவில் உள்ள பிரம்மாண்ட இயக்குனர் ராஜமவுலி ஒரு பெரிய உதவி செய்திருக்கிறார். ராம்சரண் மற்றும் ஜூனியர் என் டி ஆர் ஐ வைத்து RRR படத்தை இயக்கினார் ராஜமவுலி. அந்தப் படத்தில் சூட்டிங் ஸ்பாட்டில் ராம்சரணனின் ஆச்சரியமூட்டும் செயல்கள் எல்லாவற்றையும் தொகுத்து வெளியிட்டு இருக்கிறார். 20 TB கொண்ட டேட்டாவில், ராம்சரனின் செயல்பாடுகளை தொகுத்து வெளியிட்டு பட ப்ரொமோஷனுக்கு உதவி செய்துள்ளார்.