முதல்வர் மு.க ஸ்டாலின் பொதுவாக குழந்தைகளுடன் நேரத்தை செலவிட அதிக ஆர்வம் காட்டுவார். மாசம் ஒருமுறை நிச்சயம் குழந்தைகளின் பள்ளிக்கு சென்று விசிட் அடித்துவிட்டு வருவார். அப்போது குழந்தையாகவே மாறி, அந்த குழந்தைகளுடன் விலையுடுவதும், சாப்பாடு ஊட்டுவதுமாக இருப்பார். அப்படி அவர் செல்லும் எல்லா இடங்களின் விடீயோக்களும் ட்ரெண்ட் ஆகும்.
இந்த நிலையில், சமீபத்தில் குழந்தைகளிடம் நேரம் செலவழிக்க சென்றுள்ளார் மு.க ஸ்டாலின். குழந்தைகளுடன் அமர்ந்து, அவர் படிக்கும் பாடங்களை கவனித்துக்கொண்டிருந்தார். சென்னை கண்ணகி நகரில் குழந்தைகளோடு அமர்ந்து பேசும் நிகழவு ஒன்று நடந்துள்ளது.
அப்போது, அவர் கீழே அமரும்போது, பாவம் முட்டி மடங்கி விழுந்துவிட்டார். அவர் தடுமாறி விழும் காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது. அவரது வயதுக்கு பலர் எழுந்து நடக்கவே சிரமப்பட்டு கொண்டிருக்கும் வேலையில், இப்போதும் இளைஞர் போல உடற்பயிற்சி செய்வதும், வாக்கிங் போவதுமாக இருக்கிறார்.
எதுக்கு இப்படி கஷ்டப்படுத்தனும்..
இப்படி இருக்கும் வேளையில் தான் குழந்தைகளுடன் அமர்ந்து பேசும் நிகழ்வில், கீழ அமர முற்பட்டபோது, அவர் தடுமாறி விழுகிறார். அப்போதும் அதை சமாளித்துக்கொண்டு, சிரித்தபடி குழந்தைகளுடன் அமர்ந்துகொள்கிறார். மேலும் அவர் மீண்டும் எந்திரிக்கும்போது கஷ்டப்பட்டு எழுந்து கொள்கிறார்.
இந்த வீடியோ வைரலாக ஒரு சிலர் நக்கல் செய்து வருகின்றனர். மேலும் பலர், எதுக்கு இப்படி கஷ்டப்படணும். சாதாரணம் இருந்தாலே போதுமே.. என்றும் அக்கரையில் கூறிவருகின்றனர். இன்னும் ஒரு சிலர், ஷூட்டிங்-ல் இப்படி விபத்து நடப்பது எல்லாம் சாதாரண விஷயம் தான் என்று நக்கல் செய்தும் வருகின்றனர்.