ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

பால் போட்டது ஸ்டாலினுக்குதான், ஆனா அவுட் ஆனது மோடி.. அடக்கொடுமையே!

முக ஸ்டாலின் கோவைக்கு அடித்த விசிட் தமிழ்நாட்டை தாண்டி இந்தியாவை தாண்டி உலக அளவில் #WeStandWithStalin என்று ட்ரென்ட் ஆனது. கூடிய விரைவில் திமுகவும் அதிமுகவும் இணைவதில் கூட ஆச்சர்யம் இல்லை.

சென்னையின் நிலைமை கூட பரவால ஆனால் கோவை நிலைமைதான் ரொம்ப மோசம். ஏற்கனவே சென்னைக்கும் கோவைக்கும் ஏழாம் பொருத்தம். இப்ப சிலர் சென்னையை விட நாங்கதான் அதிகம் என சில கோவைகாரர்கள் பெருமைப்பட்டு கொள்கிறார்கள். இதெல்லாம் மிகபெரிய கொடுமை.

இந்த மாதிரி நிலைமைகளால் ஸ்டாலினின் முயற்சி அனைத்தும் வீணா போக வாய்ப்பு இருக்கிறது. அடுத்து கோவை திமுக கோட்டை அல்ல எனவே அவர்களை நல்லது செய்ய விட கூடாது என சிலர் கிளம்பி உள்ளார்களாம். இப்படி அரசியல் செய்தால் பாதிக்கபடுவது கோவை மக்கள்தான்.

ஆரம்பத்தில் #GoBackStalin என்று ஹாஷ்டேக் டிரெண்ட் செய்யப்பட்டது. அதெல்லாம் கோவை மக்கள் என பலர் நினைத்திருந்த வேளையில் ஒரு உண்மை செய்தி ட்விட்டர் வெளியிட்டது. அதாவது இந்த ஹேஷ் டேக் வந்தது அனைத்தும் வடநாட்டவர்கள் ஐடி லேந்து எனவே ட்விட்டர் #GoBackStalin ஹாஷ்டேக்கை தூக்கியது.

modi-bjp
modi-bjp

மேலும் ஸ்டாலினை அசிங்கபடுத்த நினைத்து வசமாக மாட்டியது ஒரு கோஷ்டி. பதிலுக்கு #GoBackModi என ட்ரென்ட் செய்து அதனை பரப்பி வைரலாக்கி விட்டனர். பால் என்னமோ போட்டது ஸ்டாலினுக்குதான் ஆனால் கிளீன் போல்ட் ஆனது மோடி என காமெடி பண்ணி வருகின்றனர்.

Trending News