புதன்கிழமை, ஜனவரி 15, 2025

Star Kavin: நோ சொன்ன விஜய் டிவி, சினிமாவுக்கு குட்பை சொன்ன கவின்.. அதுக்கு அப்புறம் தான் சம்பவமே

Star Kavin: தமிழ்நாட்டில் எந்த பக்கம் திரும்பினாலும் நடிகர் கவினை பற்றிய பேச்சு தான். நேற்று அவர் நடித்த ஸ்டார் படம் ரிலீஸ் ஆகி ரசிகர்களிடையே பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றிருக்கிறது.

தியேட்டரில் ரசிகர்களோடு உட்கார்ந்து படத்தை பார்த்துவிட்டு வெளியில் வந்த கவின் கண்ணீர் விட்டது எல்லோரையுமே நெஞ்சை கலங்கடித்தது. படம் ரிலீஸ் ஆகி முதல் நாளுக்கே எதுக்கு இவ்வளவு கண்ணீர் என நெகட்டிவ் விமர்சனங்களும் வந்தது.

உண்மையிலேயே கவின் அவர் பட்ட கஷ்டங்கள் கண் முன்னாடி வந்து போனதால் தான் கண்கள் கூட அப்படி கலங்கி இருக்கிறது. கவின் விஜய் டிவியின் வளர்ப்பு என்று அவர் மீது ஒரு பார்வை இருக்கிறது. ஆனால் அந்த விஜய் டிவியே கவினை ஒதுக்கிய சம்பவமும் நடந்தது தான்.

சரவணன் மீனாட்சி சீசன் 2வில் வேட்டையன் கேரக்டர் மூலம் மக்கள் மனதில் கவின் இடம் பிடித்தார். அந்த சமயத்தில் விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடங்குவதாக இருந்தது. கவினுக்கு அப்போது மக்களிடையே நல்ல வரவேற்பு இருந்ததால் அவரை முதல் சீசனில் அழைத்திருக்கிறார்கள்.

ஆனால் கவின் அப்போது படங்களில் நடிப்பதற்கு அதிக ஆர்வம் செலுத்தி வந்திருக்கிறார். இதனால் வந்த பிக் பாஸ் வாய்ப்பை கவின் வேண்டாம் என சொல்லி இருக்கிறார். பிக் பாஸ் இரண்டாவது சீசன் ஆரம்பிக்கப்பட்டபோது கவினுக்கு சுத்தமாக எந்த வாய்ப்பும் இல்லை.

உண்மையை சொல்லப்போனால் கவின் என்ற ஒரு ஆள் இருப்பதையே மக்கள் மறந்திருந்தார்கள். அப்போது விஜய் டிவியின் பிக் பாஸ் இரண்டாவது சீசனில் கலந்து கொள்வதற்காக கவின் அணுகி இருக்கிறார். ஆனால் நீ இந்த சீசனுக்கு செட் ஆக மாட்ட என்று சொல்லி விஜய் டிவி கவினை ரிஜெக்ட் செய்துவிட்டது.

சினிமாவுக்கு குட்பை சொன்ன கவின்

எந்த பக்கம் திரும்பினாலும் கவினுக்கு வாய்ப்பு அமையவில்லை. நட்புனா என்னன்னு தெரியுமா படம் ரிலீஸ் ஆகி பெரிய அளவில் வரவேற்பையும் பெறவில்லை. இனி வேலை வெட்டி இல்லாமல் நண்பர்களிடம் பணம் வாங்கிவிட்டு சென்னையில் இருப்பது செட்டாகாது என்று கவின் முடிவெடுத்து விட்டார்.

கடைசியாக ஒரே ஒரு வாய்ப்பு கிடைக்குமா என்று பார்ப்போம் என்று நினைத்துக் கொண்டு, இயக்குனர் நெல்சன் இடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து கொண்டிருந்திருக்கிறார். ஏர்டெல் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் உதவி இயக்குனராக இருந்தபோது விஜய் டிவியின் பிரதீப் கவினை நேரில் சந்தித்து பேசி இருக்கிறார்.

ஒரு வாரம் கழித்து பிக் பாஸ் மூன்றாவது சீசனில் கலந்து கொள்ள பிரதீப் கவினை அழைத்து இருக்கிறார். கவின் இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டார். பிக் பாஸ் மூன்றாவது சீசனும், கவினும் இனி எத்தனை வருடங்கள் ஆனாலும் மக்களால் மறக்கப்பட மாட்டார்கள்.

அந்த அளவுக்கு கவின் தன்னுடைய சிறப்பை கொடுத்து விட்டார். இதற்குப் பிறகுதான் அவருக்கு லிப்ட் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. டாடா படம் பற்றி சொல்லி தெரிய வேண்டிய அவசியம் இல்லை. அப்படி ஒரு வெற்றியை பெற்றது.

இப்போது ஸ்டார் படம் ரிலீஸ் ஆகி பெரிய அளவில் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. ஒரே பாட்டில் கஷ்டப்பட்டு வெற்றி பெறும் சினிமா ஹீரோக்கள் எத்தனையோ பேரை பார்த்திருப்போம். ஆனால் உண்மையான கதாநாயகன் கவின் தான்.

சினிமா இனி நமக்கு கை கொடுக்காது என்று மூட்டை முடிச்சை கட்டி சொந்த ஊருக்கு செல்ல காத்திருந்தார். இருட்டிய வீட்டில் கிடைத்த சின்ன மெழுகுவர்த்தியாக அவருக்கு கிடைத்த வாய்ப்பு தான் பிக் பாஸ் 3. அதன் மூலம் கிடைத்த வெற்றி கொஞ்சம் கொஞ்சமாக உபயோகித்து இப்போது கோலிவுட்டின் அடுத்த சிவகார்த்திகேயன் என்று புகழும் அளவுக்கு தன்னை வளர்த்திருக்கிறார்.

Trending News