புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

ஆத்துல போட்டாலும் அளந்து போடணும் கதிரு.. தானா திண்ணு வீணா போகும் பாண்டியன் குடும்பம்

விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கதிர் ஆரம்பித்த ஹோட்டலில் நாளுக்கு நாள் நஷ்டம் ஏற்படுவதால் முல்லை அதைக்கண்டு கலங்குகிறார். இதனால் இட்லி, தோசை தவிர வேறு ஏதாவது புது விதமான உணவுகளை சமைத்துக் கொடுப்பதன் மூலம் வாடிக்கையாளர்களை ஹோட்டலுக்கு வரவைக்க வேண்டும் என்று முல்லை நினைக்கிறார்.

ஏனென்றால் இப்படி ஒவ்வொரு நாளும் நஷ்டம் ஏற்பட்டால் என்ன ஆகும்? ஆகையால் ஆற்றில் போட்டாலும் அளந்து போட வேண்டும் என்று முல்லை அறிவுரை கூறுகிறார். புதுவித உணவுகளை சமைப்பது குறித்து முல்லை கதிரிடம் விளக்கமளிக்கிறார்.

Also Read: பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திற்கு ஏற்பட்ட நஷ்டம்

ஆனால் அதைக் கேட்க மறுக்கும் கதிர், ‘இட்லி தோசை ஓடுவதற்குகே வழியில்லை. இதில் புது உணவை சமைத்து அதன் மூலம் வாடிக்கையாளர்களிடம் கெட்டபெயர் வாங்க விரும்பவில்லை’ என்று சொல்கிறார். அதைக் கேட்டு முல்லையும் அமைதியாக இருந்துவிடுகிறார்.

இருப்பினும் நாளுக்கு நாள் கதிர் ஆரம்பித்த பாண்டியன் ஹோட்டலில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருப்பதால், கூடிய விரைவில் கடை நல்ல வளர்ச்சி அடையும் என்று இருவரும் நம்புகின்றனர்.

Also Read: நாமளே ஆக்கினத நாமளே சாப்பிட்டா கடை விளங்கிடும்

மேலும் சமைத்த உணவை வீணாக்கக் கூடாது என்பதற்காக பாண்டியன் ஸ்டோர்ஸில் இருப்பவர்களுக்கும் கதிர் மதிய உணவை டிபன் கேரியரில் கட்டி கொடுத்து அனுப்புகிறார். அதை சாப்பிட்ட தனம் மற்றும் ஜீவா இருவரும் கதிர் சமைத்த உணவை குறித்து புகழ்ந்து பேசுவதுடன் கூடிய விரைவில் இந்த ஹோட்டலின் மூலம் கதிர் நல்ல நிலைமைக்கு வருவார் என்றும் பாராட்டுகிறார்கள்.

இதைப் பார்த்த சீரியல் ரசிகர்கள், உணவு வீணாய் போகக் கூடாது என நினைத்ததெல்லாம் சரிதான். ஆனால் ஹோட்டலில் சமைத்த உணவை குடும்பமே சாப்பிடுவதால் ‘தானா திண்ணு வீணா போறீங்களே’ என்று கிண்டல் செய்கின்றனர்.

Also Read: பாண்டியன் ஸ்டோர் பிரபலங்களின் உண்மையான கணவன் மனைவி

Trending News