திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

சிங்கத்தை சீண்டினால் என்னவாகும்?. இணையத்தில் வெளியான லியோ பட மிரட்டலான கதை

Leo Movie Story : விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் லியோ படம் வெளியாக இன்னும் 20 நாட்களே உள்ள நிலையில் ரசிகர்களின் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டிருக்கிறது. அந்த வகையில் லோகேஷ் தன்னுடைய படத்திலிருந்து நூலிழை கூட கசிந்து விடக்கூடாது என்பதில் எப்போதுமே மிகவும் கவனமாக இருக்கக் கூடியவர்.

ஏனென்றால் லோகேஷின் படங்களில் எக்கச்சக்க சஸ்பென்ஸ்கள் நிறைந்திருக்கும். அந்த வகையில் லியோ படத்திலும் தரமான சம்பவத்தை லோகேஷ் இறங்கி இருக்கிறார். இந்நிலையில் லியோ படத்தின் கதை குறித்து இணையத்தில் தகவல் கசிந்து இருக்கிறது. அதாவது விஜய் தனது மனைவி மற்றும் மகளுடன் ஒரு சிறிய மலைப் பாங்கான இடத்தில் வசித்து வருகிறார்.

Also Read : சிங்கம் எறங்கினா காட்டுக்கே விருந்து, குலசாமிய வேண்டிக்க நீ.. வெறித்தனமாக வந்த லியோ செகண்ட் சிங்கிள்

அங்கு ஒரு சாக்லேட் ஃபேக்டரி நடத்தி வரும் விஜய் மிகவும் மகிழ்ச்சியான மற்றும் அமைதியான சூழ்நிலையில் வாழ்ந்து வருகிறார். அப்போது ஊருக்குள் புகுந்த கொலை கும்பல் பலரை மர்மமான முறையில் கொன்று குவிக்கிறார்கள். இதனால் விஜய்யின் குடும்பமும் பாதிப்பை சந்திக்க நேரிடுகிறது.

இதை அடுத்து தனது குடும்பத்தை பாதுகாத்து இந்த பிரச்சனையை எவ்வாறு விஜய் சமாளிக்கிறார் என்பதுதான் லியோ படத்தின் கதை. சிங்கத்தை சீண்டினால் என்ன செய்யும் என்பதைப் போல விஜய்யை சீண்டியதால் ஏற்படும் விளைவு தான் லியோ. அதிலும் இந்த கொலை கும்பலில் மிகவும் கொடூர வில்லனாக அர்ஜுன் நடித்திருக்கிறார். மேலும் படம் முழுக்க ரத்தம் தெறிக்கும் படியாக வன்முறை காட்சிகள் அடங்கி இருக்கிறது.

Also Read : வயித்துல அடிச்சு பிடுங்கிய 2 கோடியை வீதியில் இறைத்த லியோ டீம்.. எனக்கென்னன்னு ஜாலியா இருக்கும் தளபதி

மேலும் இந்த படத்தில் சஞ்சய் தத்தின் கதாபாத்திரமும் மிகப்பெரிய அளவில் பேசப்படும். ஏனென்றால் சமீபத்தில் லியோ படத்தின் ஹிந்தி போஸ்டர் வெளியான போது சஞ்சய் தத்தின் கழுத்தை தளபதி நெறிக்கும் படியாக காட்சி இடம்பெற்றிருந்தது. அதேபோல் மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் மேனன் ஆகியோரும் வில்லன்களாக தான் நடித்துள்ளார்கள்.

மேலும் சமீபத்தில் லியோ படத்தின் ஆடியோ லான்ச் நடக்க இருந்த நிலையில் சில காரணங்களினால் ரத்து செய்யப்பட்டது. நேற்றைய தினம் இப்படத்தில் பாடல் வரி வெளியான நிலையில் விரைவில் டிரைலரை வெளியிட பட குழுவினர் திட்டமிட்டுள்ளனர். ஆகையால் லியோ படம் விஜய் ரசிகர்களுக்கு விருந்தாக அமைய இருக்கிறது.

Also Read : லியோ ஆடியோ லான்ச் டிக்கெட் வித்து பிழைக்கணும்னு அவசியம் இல்ல.. பிஸ்மிக்கு விஜய் தரப்பில் கொடுத்த பதிலடி

Trending News