திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

நேரம் சரி இல்லாமல் லோக்கல் பேஸஞ்சரில் டிராவல் செய்யும் சிம்பு.. பாக்கெட் மணியே இல்லாத நிலைக்கு தள்ளப்படும் STR!

STR 48 is not initialized and timing is not correct for simbu: சினிமாவில் தான் கற்ற மொத்த வித்தையையும் தன் மகனுக்கு கற்றுக் கொடுத்து அவரை ஒரு பெரிய சூப்பர் ஸ்டார் அளவுக்கு கொண்டு வர வேண்டும் என்று எதிர்பார்த்தார் டி ராஜேந்தர். ஆனால் லிட்டில் சூப்பர் ஸ்டாரோ தனது ஓவர் ஆட்டிட்யூட் காரணமாக புண்ணாகிப் போனார். 

மன்மதன், வல்லவன், விண்ணைத்தாண்டி வருவாயா  என பல வெற்றி படங்களை கொடுத்த சிம்பு ஒரு கட்டத்தில் தொடர் தோல்வியின் காரணமாக முடங்கினார். அதன் பின் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் மாநாடு திரைப்படம் அவருக்கு ஒரு கம்பேக்காக அமைந்தது. 

தொடர்ந்து வெந்து தணிந்தது காடு, பத்து தல என இவரது படங்கள் ஹிட் அடித்ததும் திரும்பவும் தலைக்கனத்தோடு சுற்று ஆரம்பித்தார். தோல்வியின் போது கை கொடுத்த தயாரிப்பாளர்களை கண்டு கொள்ளாமல் அவர்களுடன் மோதல் போக்கை கடைபிடித்து ஒத்துக்கொண்ட படங்களை நடிக்காமல் பலவாறு பிரச்சனை செய்தார்.  விஷயம் நீதிமன்றம் வரை சென்று சமரசம் செய்யப்பட்டது. 

Also read: சிம்புவை தூக்கி எறிந்த கமல்.. STR க்கு திருப்பி அடிக்கும் கர்மா..!

சினிமாவில் இவர் கடைபிடிக்கும் போக்கே! இவரது காலை வாரவும் செய்து விடுகிறது. இறுதியாக ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் STR 48 படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். சிம்புவின் திரை வாழ்விலேயே மிக அதிக பட்ஜெட் படம் என்றால் அது இதுதான். சரித்திர கதையை பின்புலமாகக் கொண்டதால் பிரம்மாண்டமான முறையில் எடுக்கப் போவதாக தகவல் வெளிவந்தது. 

இதற்கான டெஸ்ட் சூட், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், என சுட சுட வந்த போதும் படப்பிடிப்பு கால தாமதமாகி கொண்டே போய் வருகிறது.  இதற்காக சிம்பு பல்வேறு பயிற்சிகளை முறையாக மேற்கொண்டு வேற லெவல்ல தயாராகி வந்தார். சினிமா ஆர்வலர்கள் முதற்கொண்டு “சிம்பு இஸ் பேக்” என பல்வேறு வகையிலும் ஏத்தி விட்டனர்.

பிப்ரவரி மாதத்தின் கடைசியில் ஆரம்பிக்கப்பட இருந்த சூட்டிங் இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை இதனால் ரொம்ப அப்செட் ஆன சிம்பு அதே படத்திற்காக வைக்கப்பட்ட நீண்ட தலைமுடியுடன் துபாயில் சுற்றிக்கொண்டு இருக்கிறார். சமீபத்தில் டிராவல் அட்வர்டைஸ்மெண்டுக்கும் நடித்துக் கொடுத்து போனார். செலவுக்கு பணம் வேண்டுமாம் கமல் ஒன்னும் சொல்லாமல் மௌனம் காத்து வருகிறாராம். அவரே SK 21ல் பட்ஜெட் அதிகமாகி கஷ்டப்படுகிறார். அவர் என்ன செய்வார் பாவம்.  

கடைசியாக சிம்பு ரசிகர்களுக்கு சந்தோஷமான விஷயம் என்னவென்றால், மணிரத்தினம் மற்றும் கமலஹாசன் காம்போவில் உருவாகும் தக்ஃலைப் படத்தில் துல்கர் சல்மான் வெளியேறிவிட அந்த வாய்ப்பு  சிம்புவுக்கு கிடைக்கலாம் என்ற தகவல் வெளிவந்துள்ளது.

Also read: மணிரத்தினம் படமான்னு பயந்து ஓடும் ஹீரோ.. சென்டிமென்ட் பார்த்து நொந்து போகும் வாரிசு நடிகர்

Trending News