ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 3, 2024

சிம்புவை தூக்கி எறிந்த கமல்.. STR க்கு திருப்பி அடிக்கும் கர்மா..!

STR 48 update and why the movie is dragging without starting: குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி லிட்டில் சூப்பர் ஸ்டார் என பெயர் எடுத்து தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்த மன்மதன் ஒரு கட்டத்தில் தொடர் தோல்வியால் நொந்து போனார். வெங்கட் பிரபுவின் மாநாடு திரைப்படத்திற்கு பின் சிம்பு இஸ் ஆன் தி வே என்ற அளவு மீண்டும் ஒரு கம்பேக் கொடுத்தார். 

அன்பானவன் அடங்காதவன் அசராதவன் ஏற்பட்ட சர்ச்சையில் ஐசரி கணேஷ் சிம்புவுக்கு உதவியாக இருந்தார். அதற்கு பிரதி உபகாரமாக மூன்று படங்களை நடித்து தருமாறு கேட்டு இருந்தார். வெந்து தணிந்தது காடு  மட்டுமே நடித்துக் கொடுத்துவிட்டு கொரோனா குமார் படத்தை கிடப்பில் போட்டு விட்டார். 

ஐசரி கணேஷிடம் வாங்கிய தொகையில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே கொடுத்து கணக்கு முடிந்தது என்று கிளம்பிவிட்டார் சிம்பு. இதனால் அதிர்ச்சி அடைந்த தயாரிப்பாளர் பொறுத்து பார்த்து  கடைசியில் பொங்கி எழுந்தார். இந்த சர்ச்சையில் தந்தை TR தலையிட்ட போதும் எந்த ஒரு மாற்றமும் வராமல் அவரது கொள்கையில் விடாப்பிடியாக இருந்தார்.  

Also read: கொஞ்சம் அசந்ததனால் சிம்புக்கு வந்த நிலை.. GVM படத்துக்கு பின் STR எடுத்த தடாலடி முடிவு

ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் ரங்கூன் பட புகழ் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சரித்திர பின்னணியை பின்புறமாகக் கொண்ட STR48 படத்தில் ஒப்புக்கொண்டு கால்ஷீட் ஒதுக்கினார். சமீபத்தில் சிம்புவின் பிறந்தநாளை ஒட்டி STR48 படத்தின் போஸ்டர் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்திருந்தார் கமல்

அதிக பட்ஜெட் கொண்ட திரைப்படமாக சிம்புவின் STR 48 இருந்தது. சரித்திர பின்னணி என்பதால் கிராபிக்ஸ் கலைஞர்கள் முதற்கொண்டு பல வேலைகளை தேர்ந்தெடுத்து செய்தனர் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தினர். இதனால்தான் படப்பிடிப்பு தாமதமாகிறது என்று ஒரு புறம் செய்தி வந்து கொண்டிருந்தது. 

 கமலஹாசனின் ரத்த உறவுகள் மற்றும்  மகள் அக்சரா ஹாசன் சிம்புவின் ஆட்டிட்யூட் பத்தி தந்தையிடம் கூறி  சிம்பு வேண்டாம் என்று விலக சொல்லி இருக்கிறாராம். அவர் தயாரிப்பாளர்களிடம் நடந்து கொள்வது, சூட்டிங் ஒழுங்கா வராதது என அடுக்கடுக்கான குறைகளை அடுக்கினாராம் அக்சரா. இவர் படத்திற்கு நூறு கோடி பட்ஜெட் போட்டால்  வசூல் வருமா என்று கேள்வி கணை தொடுத்து அப்பாவை ஆப் செய்துள்ளார் அக்சரா. 

என்ன நடக்கிறது என்று சிம்பு சொல்லனும், இல்ல கமல் சொல்லணும் அதுவரை எதையும் நம்ப முடியாது. சிம்புக்கு பிறகு வந்த ஹீரோக்கள் 40 கோடியிலிருந்து 50 கோடி வரை சம்பளம் வாங்கி மார்க்கெட்டை உயர்த்திக் கொண்டு செல்ல “உலகமே ஸ்பீடா ஓடுது! என் வண்டி பஞ்சர் ஆகி நிக்குது” என்று  தவித்து நிற்கிறார் இந்த தலை மகன். 

Also read: குறுக்கு வழியில் புத்தியை தீட்டும் சிம்பு!கமலை நம்பினால் மூளை மழுங்கிடும்  தொடங்கிய ஆரம்பபுள்ளி!

- Advertisement -spot_img

Trending News