புதன்கிழமை, ஜனவரி 15, 2025

பிளேபாய் அவதாரம் எடுத்த சிம்பு.. உலக நாயகன் கமலஹாசன் கொடுத்த ஐடியா

நடிகர் சிம்பு வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு தற்போது இயக்குனர் கிருஷ்ணா இயக்கத்தில் பத்துதல படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. பத்து தல திரைப்படத்தில் சிம்புவுடன், கௌதம் கார்த்திக் மற்றும் பிரியா பவானி சங்கர் ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் நடிகர் ஆர்யாவின் மனைவி சாயிஷா ஒரு நடன காட்சியிலும் வருகிறார்.

பத்து தல திரைப்படத்தின் வேலைகள் முடிந்த கையோடு சிம்பு தன்னுடைய 48வது படத்தின் படப்பிடிப்பு வேலைகளை தொடங்க இருக்கிறார். உலகநாயகன் கமலஹாசனின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் சிலம்பரசன் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் அப்டேட் கடந்த வாரம் வெளியானது.

Also Read: பத்து தலையில் வெளிவந்த 8 தலைகள்.. மணல் மாஃபியாவை அநியாயமாய் செய்யும் சிம்பு

உலக நாயகன் கமலஹாசன் இந்த திரைப்படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்க இருக்கிறாராம். சிம்பு நடிக்கும் இந்த படத்தின் மொத்த பட்ஜெட் 100 கோடி ஆகும். மேலும் இந்த திரைப்படத்தை இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்குகிறார். கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு தேசிங்கு சிம்புவுடன் தான் இணைந்து இருக்கிறார்.

இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தில் சிம்பு பிளேபாய் கெட்டப்பில் நடிக்க இருக்கிறாராம். இதற்காக தன்னுடைய ஹேர் ஸ்டைலையும் மாற்றி இருக்கிறார் . எண்பதுகளில் ஹீரோக்கள் வைத்திருந்த பங்க் எனப்படும் ஹேர் ஸ்டைலில் தான் தற்போது சிம்புவின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி கொண்டிருக்கின்றன. நடிகர் ஆர்யா நடித்த வட்டாரம் திரைப்படத்தில் அவர் பங்க் ஹேர் ஸ்டைலில் தான் இருப்பார்.

Also Read: விஜய், அஜித், சூர்யாவுக்கு போட்டியாக உருவாக்குவேன்.. சிம்புவுக்கு வாக்கு கொடுத்த தயாரிப்பாளர்

தற்போது அதே ஹேர் ஸ்டைலில் தான் சிம்பு பயங்கர சார்மிங்காக இருக்கிறார். பிளேபாய் கெட்டபுக்கு இந்த ஹேர் ஸ்டைல் தான் நன்றாக இருக்கும் என கமலஹாசன் தான் இந்த கெட்டப்பை பரிந்துரை செய்திருக்கிறாராம் நடிகர் சிம்புவுக்கு. தேசிங்கு பெரிய சாமியும் சிம்புவும் இணைந்து இருப்பதால் இந்த படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு ரொம்பவும் அதிகமாக இருக்கிறது.

சிம்பு நடித்து வரும் பத்துதல திரைப்படம் இந்த மாதம் 30 ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்த படம் ரிலீஸ் ஆவதற்கு முன்னரே வந்த STR48 அப்டேட் அவருடைய ரசிகர்களுக்கு தற்போது டபுள் ட்ரீட்டாக அமைந்திருக்கிறது. அதுவும் உலகநாயகன் தயாரிப்பில் சிம்பு நடிப்பது என்பது இன்னும் மிகப்பெரிய எதிர்பார்ப்பாகத்தான் அமைந்திருக்கிறது. இந்த படத்தின் அடுத்த கட்ட அப்டேட்டை விரைவில் எதிர்பார்க்கலாம்.

Also Read: என்னால எத்தனை பேரு செத்தானு தெரியாது, எத்தன பேர வாழ்ந்தானு தெரியாது.. பதற வைத்த பத்து தல டீசர்

Trending News