நடிகர் சிலம்பரசன் நடித்த வெந்து தணிந்தது காடு திரைப்படம் கடந்த வாரம் ரிலீஸ் ஆகி வெற்றி நடை போட்டு கொண்டிருக்கிறது. சிம்பு-கௌதம் வாசுதேவ் மேனன் கூட்டணியில் விண்ணை தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்களை தொடர்ந்து இந்த படம் ஹாட்ரிக் கூட்டணியாக அமைந்தது. சிம்பு ரசிகர்களிடம் இருந்து மட்டுமல்லாமல் பொது ஜன ரசிகர்களிடம் இருந்து பாராட்டுகளை பெற்று கொண்டிருக்கிறது.
நகரத்தின் ஸ்டைல் எல்லாம் கொஞ்சம் கூட இல்லாமல் அச்சு அசல் கிராமத்து இளைஞனை போல் சிம்பு இதில் நடித்து இருக்கிறார். மும்பையில் புரோட்டா கடையில் வேலை பார்க்கும் முத்து எப்படி சூழ்நிலையின் காரணமாக கேங்ஸ்டர் ஆகிறான் என்பது தான் படத்தின் கதை. இந்த படத்திற்கு AR ரகுமான் இசையமைத்திருக்கிறார்.
Also Read: சிம்புக்கு சப்போர்ட் பண்ணிய சேனல், அந்தர் பல்டி அடித்த STR.. எவனையும் நம்பி எதையும் பேசக்கூடாது
மக்களிடையே யூடியூப் புழக்கம் அதிகமான பிறகு அது சினிமா உலகத்தை கொஞ்சம் அதிகமாகவே பாதிக்க ஆரம்பித்து விட்டது என்றே சொல்லலாம். இப்போதெல்லாம் இன்ஸ்ட்டாகிராம், ட்வீட்டர், யூடியூப் என இஷ்டத்திற்கு எல்லோரும் படங்களுக்கு விமர்சனம் சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். தியேட்டரில் உட்கார்ந்து கொண்டு இண்டர்வெல்க்கு முன்னாடியே படத்துக்கு மார்க் போட்டு விடுகிறார்கள்.
இப்படி திடீர் விமர்சகராக கிளம்பியவர் தான் தமிழ் டாக்கீஸ் மாறன். இவரை ப்ளூ சட்டை மாறன் என்று சொன்னால் தான் பலருக்கும் தெரியும். இவர் விமர்சனம் கூறும் விதமே ரொம்ப வித்தியாசமாக இருக்கும். இவருடைய விமர்சனங்கள் இப்போது கோலிவுட்டில் தாக்கத்தை ஏற்படுத்த ஆரம்பித்து இருப்பதால் நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் பார்வை இவர் மீது விழுந்து இருக்கிறது.
Also Read: கூல் சுரேஷ் வாழ்க்கை இனி என் கையில்.. கூவுனதுக்கு சிம்பு கொடுத்திருக்கும் வாக்குறுதிகள்
இந்த நிலையில் வெந்து தணிந்தது காடு திரைப்படம் மொக்கை என மாறன் ரொம்ப எதிர்மறையாக விமர்சித்து விட்டார். இதிலிருந்து சிம்பு, கௌதம் வாசுதேவ் மேனன், ப்ளூ சட்டை மாறனுக்கு நடுவே ஒரு மிகப்பெரிய பஞ்சாயத்து நிலவி வருகிறது. மாறனும் சும்மா இல்லாமல் சமூக வலைத்தளங்களில் சிம்பு மற்றும் கௌதம் வாசுதேவ் மேனனை வம்பிழுத்து கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் பாண்டிச்சேரியை சேர்ந்த சிம்பு ரசிகர்கள் மாறனின் புகைப்பட கட்டவுட்டிற்கு செருப்பு மாலை அணிவித்து தங்களது எதிர்ப்பை காட்டியுள்ளனர். படத்தின் முதல் பாதி சூப்பர் இண்டர்வெல் பிறகு சலிப்பு தட்டி விடுகிறது, படம் மொக்கை என பல விமர்சனங்களுக்கு நடுவே வெந்து தணிந்தது காடு படத்தின் முதல் ஆறு நாள் வசூல் 58 கோடியாம்.
Also Read: கொடுத்த காசுக்கு மேல் கூவும் ப்ளூ சட்டை மாறன்.. அடுத்த படத்திற்கு இப்பவே கவனிக்கும் நடிகர்