புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

என்னது எங்களுக்குள்ள பகையா.? அஜித்குமாரை நேரில் சந்திக்கும் சிம்பு, இப்படி ஒரு காரணமா!

STR Meets Ajithkumar: நடிகனுக்கு ரசிகர்கள் இருப்பது இயல்பு, ஆனால் நடிகனுக்கு பல நடிகர்களை ரசிகர்களாக இருப்பது ஒரு சிலருக்கு மட்டுமே அமையும். அதில் முதலில் ரஜினி இருந்து வருகிறார். ரஜினியை பார்த்து நடிக்க வந்தார்கள், நடிக்க வந்த பிறகு ரஜினியை போல செய்து வெற்றியும் பெற்று வருகின்றனர். இப்பொழுது கொடி கட்டி பறக்கும் விஜய் கூட ரஜினியை ரோல் மாடலாக வைத்து தான் தற்பொழுது வளர்ந்து வந்துள்ளார்.

அதேபோல விஜய், அஜித் இவர்களுக்கும் இதே போல் பல நடிகர்கள் ரசிகர்களாக இருந்து வருகின்றனர். அந்த வகையில் தன்னை தல ரசிகன் என நேரடியாகவே காட்டிக் கொண்டு வருவார் சிம்பு. அதை பல படங்களில் வெளிப்படையாக பேசினார் பல பேட்டிகளில் வெளிப்படையாக சொல்லியும் விடுவார்.

இதற்கு முக்கிய காரணம் தொட்டி ஜெயா படத்தில் இருந்து ஆரம்பமானது அந்த படத்தில் நடிக்க வேண்டியது அஜித் அது தம்பி சிம்புவுக்கு தான் சரியாக இருக்கும் என அவருக்கு அந்த வாய்ப்பை கொடுத்தார். இந்த படத்தில் இருந்து சினிமாவில் சிம்பு முக்கியமான ஆக்சன் ஹீரோவாக களம் இறக்கப்பட்டார். அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாகவே அவர் அஜித்தின் ரசிகனாகவே மாறிவிட்டார்.

Also Read : தனுஷை பதுங்கி அடிக்க போகும் சிம்பு.. கேப்டன் மில்லரை தூக்கி சாப்பிடும் அளவிற்கு ஒரு படம்

கொஞ்ச நாளாகவே சிம்பு முகத்தை வெளியே காட்டுவதில்லை வாய் திறந்து அதிகமாக பேசுவதில்லை. முக்கியமாக அஜித்தை பற்றி எதையும் சொல்லுவதில்லை. தற்பொழுது சிம்பு துபாயில் படத்திற்காக தனது உடலை கட்டுக்கோப்பாக வைக்க அங்கு தங்கி உடற்பயிற்சி செய்து வருகிறார். அதேபோல் அஜித் விடாமுயற்சி படபிடிப்பு இல்லாத நேரத்தில் துபாய்க்கு சென்று விடுவார்.

இப்பொழுது சிம்பு அங்கு இருப்பதால் அஜித்தை சந்திக்க போகிறாராம். சிம்பு மீது அஜித் கொஞ்சம் வருத்தத்தில் இருக்கிறாராம். அதை சரி செய்ய இதை பயன்படுத்திக் கொள்ளப் போகிறார். இதன் மூலம் எப்பொழுதுமே நான் உங்கள் ரசிகன் என்று நிரூபிக்க போகிறாராம். இடையில் சில தேவையில்லாத பேச்சுகள் வந்தன அதை பொய்யாக்க விதமாக இந்த சந்திப்பு அமையும்.

வாரிசு படத்தில் விஜய்க்காக ஒரு பாடலை பாடினார், பாடியதும் இல்லாமல் நடித்துக் கொடுத்து விஜய் புகழ்வது போல பாடல் இருந்தது. அது அஜித் ரசிகர்களுக்கு வெறுப்பை கொடுத்தது. இதனால் தான் இந்த பிரச்சனை அப்படியே உருவானது அதை சரி செய்து விட்டால் எப்பொழுது போல தல ரசிகர்கள் சிம்புவுக்கு ஆதரவு கொடுப்பார்கள். ஆனால் அஜித் சிம்புவை சந்திப்பாரா இல்லையா என்பது போக போக தெரியும்.

Also Read : தனுசை காலி பண்ண சிம்பு போட்டிருக்கும் பிளான்.. பல வருடங்களுக்குப் பின் மோதப் போகும் 50வது படம்

Trending News