சிம்பு என்ற உடன் நினைவிற்கு வருவது சிம்பு என்கிற சிலம்பரசன் இப்போது எஸ்.டி.ஆர். அப்படி எந்த அடையாளமோ புனைப்பெயரோ தேவையற்ற அறிமுகமாகிறார் எஸ்.டி.ஆர்.
நடிப்பு, நடனம், இயக்கம், கதை, திரைக்கதை, பாடகர், பாடலாசிரியர் என பன்முகத்தன்மை கொண்ட நடிகர். யானைக்கும் அடிசறுக்கும் என்பது போல இடைக்காலத்தில் படவாய்ப்பின்றி பரிதவித்து வந்த எஸ்.டி.ஆருக்கு இப்போதோ தொடர்ந்து கால்ஷீட் பிசியாகி வருகிறது.
கடந்த ஆண்டு வெளியான ஈஸ்வரனை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கததில் மாநாடு படமும் நிறைவுக்கு வந்து விட்டது. அதையடுத்து கல்பாத்தி அகோரம் ஏ.ஜி.எஸ் எண்டர்டெய்ன்மென்ட் சிம்புவின் அடுத்த படத்தை தயாரிக்க முன்வந்துள்ளது.
அந்த நிறுவனம் அவரின் படத்திற்கான மொத்த நிதி மதிப்பீடு குறித்து கலந்துரையாடிய போது இதுவரை எஸ்.டி.ஆர் எந்த படத்திலும் இவ்வளவு அதிக பட்ஜெட்டில் நடித்ததில்லையாம்.
ஆனால் தயாரிப்பு நிறுவனம் செலவை பற்றி யோசிக்கவே இல்லை. சிம்பு படத்திற்காக இதை விட அதிக நிதி செலவிடவும் தயாராக உள்ளதாம். கிட்டதட்ட 100 கோடிக்கு மேல் முதலீடு செய்ய இருக்கலாம் என்று கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.