திரைப்படத்தில் நடிகர்கள் ஒவ்வொரு திரைப்படத்திற்கும் கடுமையாக உழைப்பது அவர்களுடைய ரசிகர்களுக்கு நன்றாக தெரியும். உடல் எடையை குறைப்பது, கூட்டுவது, முகத்தில் வேறுபாடு மாறுவதற்கான கடுமையான மேக்கப் என்று ஒவ்வொரு படத்திலும் நடிகர்களின் கடின உழைப்பை பார்க்க முடியும்.
அதேபோல தான் இப்போது நம்முடைய எஸ்டிஆர் அவர்கள் கடுமையான முயற்சிக்குப் பின் 15 வயது சிறுவன் போல தோற்றமளிக்கிறார். வந்தா ராஜாவா தான் வருவேன் என்ற திரைப்படத்தில் அதிக உடல் எடையுடன் காணப்பட்டதால் பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டார் சிம்பு. அதன் பின்பு ஈஸ்வரன் திரைப்படத்தில் எடையை குறைத்து அனைவரையும் ஆச்சரியத்தில் தள்ளினார்.
தற்போது சிம்பு கௌதம் மேனன் இயக்கத்தில் “வெந்து தணிந்தது காடு” என்ற தலைப்பில் உருவாகும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இத்திரைப்படத்தில் சிம்பு 15 வயது சிறுவன் போல கையில் ஒரு கம்புடன் சுற்றி காடு கொழுந்துவிட்டு எரிய கைலியுடன் நிற்பது போல அமைந்திருக்கிறது இந்த போஸ்டர். இந்த திரைப்படத்திற்காக சிம்பு மேலும் 12 கிலோ எடையை குறைத்துள்ளார்.
கௌதம் மேனனுடன் 3வது முறையாக கைகோர்க்கிறார் சிம்பு. விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா இந்த என்ற தலைப்பில் திரைப்படங்களில் சாக்லேட் பாயாக இருந்த சிம்பு இப்போது முற்றிலும் வேறு கெட்டப்பில் உள்ளார்.
இத்திரைப்படத்திற்கு முதலில் நதியில் நீராடும் சூரியன் என்ற பெயரே வைக்கப்பட்டிருந்தது அதை மாற்றி அதற்கு இயக்குனர் கௌதம் விளக்கம் அளித்துள்ளார் மகாகவி பாரதியாரின் நூறாவது ஆண்டு கொண்டாடப்படுவதை எடுத்து அவரின் நினைவாக இத்திரைப்படத்திற்கு வெந்து தணிந்தது காடு என்ற தலைப்பு வைக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் இது ஒரு சிறந்த திரைப்படமாக இருக்கும் என்றும் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள். திருச்செந்தூரில் விறுவிறுப்பாக படப்பிடிப்பு தொடங்கியுள்ளது அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னை மற்றும் புதுச்சேரியில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.